ரசிகர்களுக்கு தெரியாத விராட் கோலி செய்யும் சேட்டையான 5 ரகசிய குணங்கள் – நண்பர்கள் வெளியிட்ட ருசிக்கர பின்னணிகள்

kohli
Advertisement

டெல்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி 2008 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக இந்தியாவுக்கு வென்று கொடுத்ததால் அதே வருடம் சர்வதேச அரங்கில் அறிமுகமாகி அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனியின் தேவையான ஆதரவுடன் 2011 முதல் 3 வகையான இந்திய அணியிலும் தனது அபார பேட்டிங் திறமையால் முக்கிய முதுகெலும்பு வீரராக விளையாடி வருகிறார். ஜாம்பவன் சச்சினுக்கு பின் ரன் மெஷினாக 23000+ ரன்களையும் 70 சதங்களையும் விளாசி இந்தியாவுக்கு ஏராளமான சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வரும் அவர் 33 வயதிலேயே தன்னை ஒரு ஜாம்பவானாக நிரூபித்துள்ளார்.

kohli century

கேப்டனாகவும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் 2016 – 2021 வரை தொடர்ந்து இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக வலம் வர வைத்த பெருமைக்குரியவர். ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் கட்டுக்கோப்பாக மிடுக்காக செயல்படக்கூடிய அவர் களத்தில் எதிரணியினர் சீண்டினால் எரிமலையாக வெடிக்கும் குணத்தைக் கொண்டவர்.

- Advertisement -

அதேபோல் சக அணி வீரர்களிடம் கலகலப்பாகவும் ஜாலியாகவும் பழகக்கூடிய அவர் நிறைய தருணங்களில் களத்தில் சேட்டைகளை செய்து ரசிகர்களை மகிழ்விப்பவராகவும் உள்ளார். குறிப்பாக 2013 சாம்பியன்ஸ் டிராபி வென்றதும் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் அப்போதைய ட்ரெண்டிங்கில் இருந்த கங்னம் ஸ்டைல் பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடி கொண்டாடியதை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.

Champions trophy

நாட்டியான விராட்:
இருப்பினும் மனிதனாக பிறந்த ஒவ்வொருவமே வெளியில் ஜென்டில்மேனாக நடந்து கொண்டாலும் உள்ளுக்குள் சில குறும்புத்தனமான சேட்டைகள் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அது அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கும் என்ற நிலையில் விராட் கோலி போன்ற நட்சத்திர கிரிக்கெட் வீரரின் அதுபோன்ற சேட்டைகளை ரசிகர்கள் அறிந்திருக்க முடியாது. ஆனாலும் அவருடைய சில குறும்புத்தனமான சேட்டைகளை அவருடைய நண்பர்களும் அவருடன் விளையாடிய வீரர்களும் நிறைய தருணங்களில் பகிர்ந்துள்ளார். அந்த தொகுப்புகளை பார்ப்போம்:

- Advertisement -

anushkoli

5. மனைவியின் முன்: நட்சத்திர வீரராக இருக்கும் விராட் கோலி தனது அந்தஸ்துக்கு ஏற்ப பாலிவுட் நட்சத்திரமான அனுஷ்காவை திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்றுள்ளார். அந்த வகையில் தனது மனைவிக்கு முன்பாக கட்டுக் கோப்புடன் நடந்து கொள்ள நினைக்கும் விராட் கோலி அவர் சென்றதும் ஜாலியாக அரட்டை அடிப்பார் என்று அண்டர்-19 உலக கோப்பையில் அவருடன் விளையாடிய இந்திய வீரர் பிரதீப் சங்வான் சமீபத்தில் தெரிவித்தது பின்வருமாறு.

“நண்பர்களுடன் இருக்கும்போது அனுஷ்கா சர்மா அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் உடனே விராட் கோலி குறும்புகளை ஆரம்பித்து விடுவார். ஆனால் அவர் வந்ததும் நல்ல பையனை போல் நடந்து கொள்வார்” என்று கூறியிருந்தார்.

- Advertisement -

kohli u19

4. காது கடுக்கன்: நிறைய பேர் டீன் ஏஜ் பருவத்தில் ஸ்டைல் காட்டுவதற்காக வித்தியாசமான உடைகள் போன்றவற்றை அணிவார்கள். அந்த இளம் வயதில் விராட் கோலி இயர் ரிங்ஸ் எனப்படும் காதணிகள் அல்லது கடுக்கன்களை காதில் அணிந்திருந்ததாகவும் அதற்காக பயிற்சியாளர்களிடம் திட்டு வாங்கியதாகவும் அவருடன் அண்டர்-19 அளவில் விளையாடிய மற்றொரு வீரர் டன்மை ஸ்ரீவாஸ்தவா கூறியது.

“ஜூனியர் நாட்களில் விராட் கோலி காதணிகளை அணிந்திருப்பார். அதற்காக டெல்லியைச் சேர்ந்த இவர் திமிராக தான் நடந்து கொள்கிறார் என்று பயிற்சியாளர்களிடம் திட்டும் வாங்கினார்” என்று கூறியிருந்தார்.

- Advertisement -

3. குறும்புக்காரர்: ஜாலியான மனிதராக தெரியும் விராட் கோலிக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்திய அணியிலேயே அதிகப்படியான குறும்பு செய்வதுடன் ரொமான்டிக் குணங்களுடன் இருக்கும் ஒரு வீரர் என்றால் அது விராட் கோலி என்று அவருடன் விளையாடும் கேஎல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் கடந்த 2018இல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான “காபி வித் கரன்” நிகழ்ச்சியில் அவரது மற்றுமொரு குணத்தை தெரிவித்திருந்தார்கள்.

4. குறும்பான குறுக்குவழி: கடந்த 2019இல் அறிமுகப்படுத்தப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தொடரின் முதல் சீசனில் விராட் கோலி தலைமையில் சக்கை போடு போட்ட இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மேலும் இங்கிலாந்தின் சௌதம்டன் நகரில் நடைபெற இருந்த மாபெரும் இறுதி போட்டியில் விளையாட நியூசிலாந்தும் தகுதி பெற்றது.

jamieson

அந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து பவுலர்களை சிறப்பாக எதிர்கொள்வதற்காக அந்த அணியை சேர்ந்த கெய்ல் ஜாமிசனை அப்போட்டியில் பயன்படுத்தப் போகும் ஸ்பெஷலான டுக் பந்துகளில் ஐபிஎல் தொடரின்போது வலைப்பயிற்சியில் பந்து வீசுமாறு விராட் கோலி கேட்டார். ஆனால் அதை ஜமிஷன் மறுத்த பின்னியை பெங்களூரு அணியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் டேன் கிறிஸ்டின் கடந்த வருடம் தெரிவித்தது ரசிகர்களிடையே வைரலானது.

1. ஏபிடியிடம் குறும்பு: பெங்களூரு அணியில் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் உடன் இணைந்து விளையாடிய விராட் கோலி அவரின் நெருங்கிய நண்பராக பழகி வருகிறார். இருப்பினும் அதிகப்படியான குறும்புகளை செய்யும் விராட் கோலியிடம் இருந்து தப்பிக்க அவரிடம் அதிகமாக பேசுவதைத் தவிர்ப்பேன் என்று ஏபி டிவில்லியர்ஸ் சமீபத்தில் கூறியது பின்வருமாறு.

“அவரிடம் ஒரு காபி வாங்கிக் கொடுக்குமாறு கேட்டேன். அதற்கு அதை அமேசானில் ஆர்டர் செய்த அவர் அடுத்த நாள் எனக்கு வாங்கி கொடுத்தார். அதனாலேயே இப்போது காபி தயாரிக்கும் மெஷின் வாங்கி விட்டேன். மேலும் உங்களது காலணிகள் எனக்கு பிடித்திருக்கிறது என்று சொன்னால் உடனடியாக அதைப் கழற்றி என்னிடம் கொடுத்து விடுவார்” என்று கூறினார்.

Advertisement