ஜஹீர் கான், வார்னேவை முந்தி.. கான்பூர் டெஸ்டில் அஸ்வின் படைக்க உள்ள 5 அட்டகாசமான சாதனைகள்

- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் வங்கதேசத்தை 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று எச்சரித்த வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்களும் 6 விக்கெட்டுகளும் சாய்த்து வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். இதைத்தொடர்ந்து இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் 2வது போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூரில் துவங்குகிறது. அப்போட்டியில் அஸ்வின் படைப்பதற்கு வாய்ப்புள்ள சில சாதனைகளைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

சாதனை பட்டியல்:

1. அஸ்வின் இதுவரை தன்னுடைய கேரியரில் டெஸ்ட் போட்டிகளின் 4வது இன்னிங்ஸில் 99* விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எனவே கான்பூர் போட்டியில் 4வது இன்னிங்ஸில் இன்னும் ஒரு விக்கெட் எடுக்கும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இன்னிங்ஸில் 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைப்பார்.
2. அஸ்வின் இதுவரை வங்கதேசத்துக்கு எதிராக 29 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

எனவே கான்பூர் போட்டியில் இன்னும் 3 விக்கெட்டுகளை எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற ஜஹீர் கான் சாதனையை உடைத்து அஸ்வின் புதிய வரலாறு படைப்பார். இதற்கு முன் ஜஹீர் கான் 31 விக்கெட்டுகள் எடுத்ததே சாதனையாக இருந்து வருகிறது.
3. அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை மொத்தம் 37 முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

- Advertisement -

வார்னேவை முந்துவரா அஸ்வின்:

கான்பூர் போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுக்கும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது அதிக முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற ஷேன் வார்னே சாதனையை உடைத்து அஸ்வின் புதிய சாதனை படைப்பார். தற்சமயத்தில் அந்த சாதனையை வார்னேவுடன் (இருவரும் தலா 37) அஸ்வின் பகிர்ந்து கொண்டுள்ளார்.
4. இது போக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அஸ்வின் 180* விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: என்ன சொன்னாலும் ஆஸியில் இம்முறை இந்தியா ஜெயிப்பது கஷ்டம்.. காரணம் இது தான்.. டிகே, தீப் தாஸ்குப்தா

அதனால் கான்பூர் போட்டியில் இன்னும் 8 விக்கெட்டுகளை எடுக்கும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் (187 விக்கெட்டுகள்) சாதனையை உடைத்து அஸ்வின் புதிய சாதனை படைப்பார்.
5. அத்துடன் மொத்தமாக 522* விக்கெட்டுகள் எடுத்துள்ள அஸ்வின் இன்னும் 9 விக்கெட்டுகள் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 7வது வீரர் என்ற நேதன் லயன் (530) சாதனையை உடைத்து மற்றுமொரு சாதனை படைப்பார்.

Advertisement