ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடித்தும் வெளியில் அமரப்போகும் 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

INDvsENG
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் டி20 தொடர் முடிவடைந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை மறுநாள் மார்ச் 23ஆம் தேதி நடக்க இருக்கிறது.இந்நிலையில் ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் சமீபத்தில் பிசிசிஐ தரப்பிலிருந்து வெளியிடப்பட்டது. இதில் இந்திய அணிக்கு முதல் முதலாக சூரியகுமார் யாதவ் டி20 தொடரில் இருந்து ஒருநாள் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார். மேலும் பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய அணி வெளியிட்ட பட்டியலில் இருந்து ஒரு போட்டியில் கூட விளையாட போகாத 5 வீரர்களை பற்றி பார்ப்போம்.

Gill

- Advertisement -

சுப்மன் கில் :

இந்திய அணியில் டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் வேண்டுமென்றால் துவக்க ஜோடி மாற்றப்படலாம். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்த தொடரில் ரோஹித் சர்மா மற்றும் தவான் ஆகியோரே துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள். மேலும் விராட் கோலி 3 ஆம் இடத்தில் களமிறங்குவார் என்பதால் சுப்மன் கில்லுக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றே தெரிகிறது.

Kuldeep-1

குல்திப் யாதவ் :

- Advertisement -

இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மொத்தமாக 59 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 105 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். ரன் ரேட்டு எகானமியும் 5 என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இருப்பினும் இரண்டு ஸ்பின் பவுலிங் உடன் தான் இந்திய அணி களம் இறங்கும்.
இதுவரை இந்திய அணி எடுத்துள்ள முடிவுகளை பார்க்கையில் ஒரு வீரராக நிச்சயம் சாஹால் அல்லது அக்சர் பட்டேல் இவர்கள் இருவரில் ஒருவர் களமிறங்குவார். இன்னொரு வீரராக ஆல்ரவுண்டர் வீரர்கள் ஆகிய குருனல் பாண்டியாவைத்தான் இந்திய அணி தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே குல்தீப் யாதவை இந்திய அணி களம் இருக்காது என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

krishna

பிரசித் கிருஷ்ணா :

- Advertisement -

கேகேஆர் அணிக்காக 2018ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா , சமீப ஐபிஎல் போட்டிகளில் நன்றாக பந்துவீசி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கவனத்தைப் பெற்று இருக்கிறார்.எனவே அவருக்கு ஒரு நாள் போட்டிக்கான வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. அணியில் ஏற்கனவே புவனேஸ்வர் குமார் , தங்கராசு நடராஜன், தாகூர் இருக்கையில் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது மிகமிக குறைவு எனவே இவளுக்கு விளையாடும் வாய்ப்பு கிடைப்பது என்பது மிக மிக குறைவே.

Siraj 2

முகமது சிராஜ் :

- Advertisement -

முகமது சிராஜ் 2019 ஆம் ஆண்டில் கடைசியாக இந்தியாவுக்கு ஒரு நாள் போட்டியில் விளையாடிய பொழுது எந்த விக்கெட்டையும் கைப்பற்றவில்லை என்பது மேலும் இவரது ரன் எக்கானமி கிட்டத்தட்ட 8 என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் 2020 ஜனவரி மாதம் முதல் எவ்வித லிஸ்ட் ஏ கிரிக்கெட் இவர் விளையாடவில்லை என்பது கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயமாகும்.

இந்திய அணி புவனேஸ்வர் குமார் , நடராஜன் , ஷர்துல் தாகூர் மற்றும் ஆல்ரவுண்டர் வீரராக தற்போது பந்துவீசி வரும் ஹர்திக் பாண்டியா இவர்கள் நான்கு பேரை மட்டும் தான் வேகப்பந்து வீச்சாளராக களம் இறக்கும். எனவே முகமது சிராஜ் ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார் எனவே தெரிகிறது.

Sundar-1

வாஷிங்டன் சுந்தர் :

வாஷிங்டன் சுந்தர் இதுவரை 39 லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.அதில் அவர் மொத்தமாக 24 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பேட்டிங்கில் 427 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் அவரது பேட்டிங் அவரேஜ் 20.3 ஆகும். இந்திய அணி ஒருவேளை ஸ்பின் ஆல்ரவுண்டரை தேர்வு செய்தால் அது நிச்சயம் க்ருனல் பாண்டியாவாக தான் இருக்கும். சமீபத்தில் நடைபெற்ற விஜய் சாரே தொடரில் பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சிறப்பாக விளையாடிய பாண்டியாவையே இந்திய அணி தேர்வு செய்யும் பட்சத்தில் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதே நித்சனமான உண்மை.

Advertisement