தோனி ஓய்வு முதல் பண்ட் கம்பேக் வரை.. 2024 ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் காத்திருக்கும் 5 முக்கிய தருணங்கள்

IPL 2024 Rishabh Pant MS Dhoni
- Advertisement -

புதிதாக பிறந்துள்ள 2024 புத்தாண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. அதே போல சர்வதேச கிரிக்கெட்டுக்கு நிகரான தரத்தை கொண்ட உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 2024 சீசனும் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சீசனில் ரசிகர்கள் காத்திருக்கும் 5 முக்கியமான தருணங்களை பற்றி பார்ப்போம்:

1. ரிஷப் பண்ட்: கடந்த 2022 டிசம்பரில் காயத்தை சந்தித்து உயிர் தப்பிய ரிஷப் பண்ட் தற்போது அதிலிருந்து குணமடைந்து வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சி மகத்தான வீரராக செயல்பட்டு வரும் அவர் இல்லாதது 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் தற்போதைய தென்னாபிரிக்க தொடரில் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வரும் அவர் ஐபிஎல் 2024 தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக கம்பேக் கொடுப்பதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

2. தோனியின் ஓய்வு: இந்தியாவுக்கு 3 விதமான உலகக் கோப்பைகளை வென்ற மகத்தான கேப்டனான எம்எஸ் தோனி ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னைக்காக விளையாடி வருகிறார். அதில் கடந்த சீசனில் 5வது கோப்பையை வென்ற அவர் வெற்றிகரமான கேப்டன் என்ற சாதனையை சமன் செய்தார். இருப்பினும் கடந்த வருடமே முழங்கால் வலியுடன் விளையாடிய அவர் 42 வயதை தொடுவதால் 2024 சீசனுடன் ஐபிஎல் தொடரிலும் ஓய்வு பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்த உள்ளது.

3. பாண்டியா கேப்டன்: தோனிக்கு நிகராக 5 கோப்பைகளை வென்று கொடுத்தும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோகித் சர்மாவுக்கு பதிலாக பாண்டியா தங்களின் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவித்துள்ளது. அதற்கு மும்பை ரசிகர்களே மிகப்பெரிய எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாண்டியா காயத்திலிருந்து குணமடைந்து எந்தளவுக்கு அசத்தப் போகிறார் என்பதை பார்ப்பதற்கு அனைவரும் காத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

- Advertisement -

4. கம்பீர் ரிட்டர்ன்ஸ்: 2012, 2014 ஆகிய வருடங்களில் கொல்கத்தாவுக்கு கேப்டனாக கோப்பையை வென்று கொடுத்த கௌதம் கம்பீர் தற்போது மீண்டும் அந்த அணியின் ஆலோசகராக செயல்பட உள்ளார். எனவே அவரது மேற்பார்வையில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் 24.75 கோடிக்கு வாங்கப்பட்ட மிட்சேல் ஸ்டார்க் போன்ற வீரர்களுடன் கொல்கத்தா கோப்பையை வெல்லுமா என்பதை பார்க்க அந்த அணி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: புதிய வருடத்தில் சாதனைகள் நிகழுமா.. 2024 புத்தாண்டில் இந்திய அணியின் முழு அட்டவணை இதோ

5. ஆர்சிபி வருடமா: காலம் காலமாக போராடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இம்முறையாவது முதல் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. குறிப்பாக கிண்டல்களை உடைத்து சரித்திரம் படைக்குமா என்பது ஆர்சிபி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என்றால் மிகையாகாது.

Advertisement