விதியை மீறி புத்தாண்டு கொண்டாடத்திற்காக ஹோட்டலுக்கு சென்ற 5 இந்திய வீரர்கள் – நிர்வாகம் எடுத்த நடவடிக்கை

Ind-lose

இந்திய வீரர்கள் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றனர். ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிவடைந்த நிலையில் இதுவரை விதிமுறைகளை மீறாமல் பயோ பபுள் வளையத்திற்குள்ளேயே இரு அணி வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். மேலும் கொரோனா தாக்கம் ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வருவதன் காரணமாக வீரர்கள் அதிக கட்டுப்பாடுகளுக்கு இடையே தனியாகவே இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய வீரர்களும் சரி ஆஸ்திரேலிய வீரர்களின் சரி எங்கும் பயோ பபுள் விதிமுறையை மீறி தனியாக செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

umesh 1

இந்நிலையில் கொரோனா விதிமுறைகளை மீறி எங்காவது சென்று வந்தால் அணிக்குள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்று இந்திய வீரர்களான ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, நவ்தீப் சைனி மற்றும் சுமன் கில் ஆகிய 5 பேரை விதிமுறையை மீறி ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிட்டு புத்தாண்டை கொண்டாடி உள்ளனர்.

அந்த ஹோட்டலுக்கு வந்த இந்திய ரசிகரான நவால்தீப் சிங் என்பவர் இந்திய வீரர்களை பார்த்த மகிழ்ச்சியில் அவர்கள் சாப்பிட்ட உணவுக்கு பணத்தை கொடுத்துவிட்டு செல்பி எடுத்ததாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அதில் மகிழ்ச்சியில் தான் ரிஷப் பண்ட்டை கட்டி தழுவியதாக அவர் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்திய வீரர்கள் பயோ பபுள் விதிமுறையை மீறி ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்டதை ஆஸ்திரேலிய ஊடகம் கடுமையாக விமர்சித்துள்ளது.

மேலும் இந்த கொரோனா விதிமுறையை மீறி ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்ட இந்திய வீரர்கள் மீது பிசிசிஐ அமைப்பும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் நடவடிக்கை என்றும் தெரியவந்துள்ளது மேலும் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய மருத்துவ குழுவினர் ஆலோசனைப்படியே புத்தாண்டு தினத்தன்று வெளியே சென்றதாகவும் அதில் அவர்கள் 5 பேரும் முன்னெச்சரிக்கையாக ஹோட்டலுக்கு முன் சேனிடைஷேஷன் செய்துகொண்டும், டெம்பரேச்சர் செக் செய்த பின்பும் உணவு அருந்தி உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

மேலும் இது குறித்து பயப்பட தேவையில்லை என்றும் கூறியுள்ளனர். ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர்கள் 5 பேரும் தற்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் மீது நடவடிக்கை பாயுமா ? என்பது விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.