2019 ம் ஆண்டு உலகக் கோப்பை மிஸ் பண்ணும் 5 வீரர்கள்..! 3 சென்னை வீரர்கள் யார் தெரியுமா..?

indiann5
- Advertisement -

இந்திய அணி தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது . அடுத்த ஆண்டு உலக கோப்பை தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற உள்ளது. இதனால் இங்கிலாந்தில் நடைபெற உள்ள இந்த தொடர் இந்தியாவிற்கு மிகவும் ஒரு முக்கியமான தொடராக கருதப்படுகிறது.இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பையில் இந்திய அணியில் பங்கேற்க முடியாமல் போக போகும் வாய்ப்புள்ள சில இந்திய வீரர்களை பற்றி காணலாம்.

rainasuresh

சுரேஷ் ரெய்னா:- 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் ரெய்னா சிறப்பாக விளையாடி 284 ரன்களை குவித்திருந்தார். அந்த தொடரில் இவரது சராசரி 56 ஆகும். அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னாப்ரிக்காவிற்கு எதிரான தொடருக்கு பிறகு ரெய்னா எந்த ஒரு நாள் போட்டியிலும் சேர்க்கப்படவில்லை. இதனால் இவர் உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் பங்கேற்பதென்பது கொஞ்சம் கடினம் தான்.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் :- இந்திய அணியில் ஒரு சிறந்த சுழல் பந்து வீச்சாளராக அஸ்வின் இருந்து வந்தாலும். சில காலமாக இவரின் விக்கெட் எடுக்கும் வேகம் குறைந்து விட்டது. அதே போல முக்கியமான தருணங்களில் இவர் விக்கெட் எடுக்க தவறி விடுகிறார். தற்போது இவரை விட அதிக விக்கெட் எடுக்க கூடிய சூழல் பந்து வீச்சாளர்கள் அணியில் இருப்பதால், இவரது வாய்ப்பு வேறு யாருக்காவது அளிக்கப்படலாம்.

ரவீந்திர ஜடேஜா :- சமீப காலமாக இவரது பந்து வீச்சு பல பேட்ஸ்மேன்களால் சோதிக்கபட்டுவிட்டது. சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கூட இவர் விக்கெட் எடுக்க திணறியதோடு அதிக ரன்களையும் கொடுத்து சொதப்பினார். மேலும், இவரது பேட்டிங் திறனும் சமீப காலமாக மங்கி கிடக்கிறது.

மொஹமத் சமி:- சமீப காலமாக இவர் தனது சொந்த குடுப்ப விடையதால் பல பிரச்னையில் இருக்கிறார். அதனால் இவர் கிரிக்கெட் போட்டியில் நல்ல மன நிலையுடன் விளையாடுவாரா என்பது மிக பெரிய கேள்வி குறிதான். அதே போல சமீப காலமாக இவரது பந்து வீச்சும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை என்பதே உண்மை.
sami
ஷ்ராய்ஸ் ஐயர் : – இளம் வீரரான இவரது செயல்திறன் குறித்து எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால், அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை இங்கிலாந்து மண்ணில் நடைபெறுவதால் இந்திய அணியில் அனுபவமிக்க வீரர்களை மட்டுமே எடுப்பார்கள் என்று எதிர்பாராக் படுகிறது. எனவே இவருக்கு அடுத்த உலக கோப்பை தொடரில் வேண்டுமானால் வாய்ப்பளிக்கபடலாம்.

Advertisement