- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கிரிக்கெட் கேரியரை ஆஹா ஓஹோ ன்னு ஆரம்பிச்சி காணாமல் போன 5 அட்டகாசமான இந்திய வீரர்கள் – லிஸ்ட் இதோ

இந்திய அணிக்காக நூற்றுக்கணக்கான வீரர்கள் விளையாடி உள்ளனர். அதில் பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு சில வீரர்களே தற்போது வரை தங்களது பெயரை பதித்து வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். பல வீரர்கள் மிகச் சிறப்பான துவக்கம் தந்து விட்டு அதற்குப் பின்னர் ஆளே காணாமல் போயுள்ளனர். அப்படிப்பட்ட 5 வீரர்களை தற்போது பார்ப்போம்.

ராபின் உத்தப்பா :

- Advertisement -

இவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இந்தியா அணிக்கு அறிமுகமானார். 2006ம் ஆண்டு முதன்முதலாக தனது 19 வயதில் ஆடினார். தனது முதல் போட்டியிலேயே 86 ரன்கள் விளாசினார். அதன்பின்னர் டி20 உலக கோப்பை தொடரிலும் நன்றாக விளையாடினார். கடைசியாக 2015ஆம் ஆண்டு அணியில் இடம் பிடித்த அவர் அதன் பிறகு அணிக்கு திரும்ப முடியவில்லை.

பார்த்திவ் படேல் :

- Advertisement -

இவர் தனது 17 வயதில் தனது 2002 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி விட்டார். ஆனால் எம்எஸ் தோனி என்ற பெரும் ஆளுமையின் முன்னர் இவரது திறமை பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. தற்போது 35 வயதான இவர் இந்திய அணிக்காக மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கி வருகிறார்.

யூசப் பதான் :

- Advertisement -

இவர் இர்பான் பதானின் அண்ணன் ஆவார். லிமிடட் ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக ஆடுவதில் வல்லவர். தற்போது இவருக்கு 37 வயதாகீறது. தொடக்கத்தில் நன்றாக விளையாடி அதன் பின்னர் சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா போன்றோரிடம் அணியில் தனது இடத்தை இழந்தார்.

தினேஷ் மங்கியா :

- Advertisement -

இடதுகை பேட்ஸ்மேனான இவர் அதிரடியாக ஆடுவதில் வல்லவர். துவக்கம் முதலே நன்றாக ஆடினாலும் இந்திய அணிக்காக இவரால் 57 ஒருநாள் போட்டிகளிலும் ஒரே ஒரு டி20 போட்டிகளில் மட்டுமே ஆட முடிந்தது.

கருண் நாயர் :

உள்ளூர் போட்டிகளில் மிக பிரம்மாண்டமான வீரர் என்று பெயர் பெற்றவர். டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக முச்சதம் விளாசினார். தற்போது 28 வயதாகிறது விராட் கோலியின் தலைமையில் இவருக்கு இந்திய அணியில் அதன்பின்னர் இடமே கிடைக்கவில்லை.

- Advertisement -
Published by