ஆஸ்திரேலியாவில் இதற்கு முன் விளையாடாத இந்திய டி20 உ.கோ அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 5 வீரர்கள்

Suryakumar Yadav IND vs HK
Advertisement

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக கடந்த வருடம் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் தலைமையில் பங்கேற்ற அத்தனை இருதரப்பு டி20 தொடர்களிலும் வென்ற இந்தியா உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறியது. அதனால் உலக கோப்பையை வெல்லும் அணியாகக் கருதப்பட்ட இந்தியா 6 அணிகள் பங்கேற்ற சமீபத்திய ஆசிய கோப்பையில் முக்கிய நேரங்களில் சொதப்பி பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது. அதனால் இந்திய ரசிகர்கள் கவலையடைந்த நிலையில் உலகக்கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

IND

அதில் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோர் திரும்பினாலும் ஜடேஜா காயத்தால் வெளியேறியுள்ளார். அதைவிட ஷமி, தீபக் சஹர் ஆகியோர் ஸ்டேண்ட் பை லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளதும் வாய்ப்புக்காக ஏங்கும் சஞ்சு சாம்சனை கழற்றி விட்டு ரிஷப் பண்ட்டுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதும் ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது. பொதுவாகவே ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் வேகம், பவுன்ஸ் ஆகியன இயற்கையாகவே இருக்கும் என்பதால் அந்த கால சூழ்நிலைகளை மனதில் வைத்தே எந்த ஒரு அணியும் தேர்வு செய்யப்படும். அந்த வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணியில் 5 வீரர்கள் இதற்கு முன் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டி20 போட்டியில் கூட விளையாடியதில்லை. அவர்களைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. அர்ஷிதீப் சிங்: சமீப காலங்களில் ஐபிஎல் தொடரில் அசத்தும் இவர் கடைசி கட்ட ஓவர்களில் துல்லியமாக பந்துவீசும் திறமை பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகமாகி அனைவரும் பாராட்டும் அளவுக்கு செயல்பட்டு வரும் இவர் சமீபத்திய ஆசிய கோப்பையில் சீனியரான புவனேஸ்வரை விட சிறப்பாக பந்து வீசினார்.

Arshdeep-Singh

இளம் வீரரான இவர் இந்த உலகக்கோப்பையின் வாயிலாக முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாட உள்ளார். அங்குள்ள கால சூழ்நிலைகள் எப்போதுமே இடது கை வேகப்பந்து வீச்சாளருக்கு பொருந்தும் என்பதால் முதல் பயணத்திலேயே இவர் அசத்துவார் என்று நம்பலாம்.

- Advertisement -

4. ஹர்ஷல் படேல்: ஐபிஎல் 2021 தொடரின் ஊதா தொப்பியை வென்று இந்திய அணியில் அறிமுகமாகி முதன்மை பவுலராக உருவெடுத்த இவர் கடைசி நேரத்தில் காயத்தால் விலகியது ஆசிய கோப்பை தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

Harshal 1

தற்போது காயத்திலிருந்து குணமடைந்தது அணியில் சேர்க்கப்பட்டுள்ள இவர் இதுவரை 18 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில் முதல் முறையாக இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாட காத்திருக்கிறார். இவரால் அதிரடியான வேகத்தில் பந்து வீச முடியாது என்றாலும் சூழ்நிலைக்கேற்ப குறைவான ரன்களைக் கொடுக்கும் வகையில் விவேகமாக பந்து வீச முடியும் என்பதால் ஆஸ்திரேலியாவிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

3. தீபக் ஹூடா: உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்தியதால் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகமான இவர் அதன்பின் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு நீண்ட நாட்கள் கழித்து சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் போல திறமையான இளம் சுழல்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக தன்னை நிரூபித்து வருகிறார்.

Deepak Hooda 104

இவரை சரியாக பயன்படுத்தாதது ஆசிய கோப்பையில் தோல்விக்கு காரணமாக அமைந்தது. மேலும் இதுவரை 8 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள இவர் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடுவதால் அங்கும் சிறப்பாக செயல்படும் திறமையை பெற்றுள்ளார் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

2. அக்சர் படேல்: சமீப காலங்களில் ஐபிஎல் தொடரிலும் இந்தியாவுக்காகவும் நல்ல சுழல்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக செயல்பட்டு நல்ல பார்மில் இருக்கும் இவர் ஜடேஜா வெளியேறியதால் இந்த உலக கோப்பையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை 26 டி20 போட்டிகளில் விளையாடினாலும் இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டி20 போட்டியில் கூட விளையாடியதில்லை. ஆனாலும் இதற்கு முன் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவம் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட அவருக்கு உதவும் என்று நம்பலாம்.

1. சூரியகுமார் யாதவ்: 30 வயதில் அறிமுகமாகி ஒரு சில வருடத்திற்குள் டி20 அணியில் நிலையான இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டு வரும் இவர் தற்சமயத்தில் இந்திய பேட்டிங் துறையில் முழுமையான நல்ல பார்மில் இருக்கும் ஒரே பேட்ஸ்மேனாக பார்க்கப்படுகிறார். மைதானத்தின் நாலா புறங்களிலும் சுழன்றடிக்கும் திறமை பெற்றுள்ள இவர் இந்தியாவின் ஏபிடி என ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

Suryakumar Yadav

கடந்த 2 வருடங்களில் டி20 கிரிக்கெட்டில் இதர இந்திய வீரர்களைக் காட்டிலும் அதிகபட்சமாக 5 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ள இவர் இதுவரை 28 போட்டிகளில் விளையாடினாலும் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக இப்போது தான் விளையாட உள்ளார். இருப்பினும் இவரிடம் உள்ள திறமைக்கு ஆஸ்திரேலியா உட்பட அனைத்து சூழ்நிலைகளிலும் அசத்துவார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement