2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக டி20 கிரிக்கெட்டில் ரிட்டையராக வாய்ப்புள்ள 5 கேப்டன்களின் பட்டியல்

INDvsRSA
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி உலகக் கோப்பை இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் ஃபைனலில் மோதுகின்றன. பொதுவாகவே சர்வதேச கிரிக்கெட்டில் சாதாரண இருதரப்பு தொடர் உட்பட அனைத்துமே உலகக்கோப்பையை மையப்படுத்தியே நடைபெறும். அந்த வகையில் ரசிகர்களுக்கு விருந்து படைத்த இந்த தொடரில் வெற்றிகளை விட தோல்விகளை சந்தித்த கேப்டன்களும் சுமாராக செயல்பட்ட கிரிக்கெட் வீரர்களும் வரும் காலங்களில் தங்களது கேரியரை நிர்ணயிக்கும் முக்கிய முடிவுகளை எடுப்பதை பார்க்க முடியும்.

T20 World Cup Captains 2022

- Advertisement -

காலம் காலமாக அது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த உலகக் கோப்பையில் எதிர்பார்த்த வெற்றிகளை பெற்றுக் கொடுக்காத காரணத்தால் அடுத்தாக 2024இல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஓய்வு பெறக்கூடிய கேப்டன்களை பற்றி பார்ப்போம்:

5. கேன் வில்லியம்சன்: நவீன கிரிக்கெட்டில் தரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக அறியப்படும் இவர் கடந்த வருடம் சந்தித்த எல்போ காயத்துக்கு பின் ரன்களை குவிக்க தடுமாறி வருகிறார். குறிப்பாக அதிரடி காட்ட வேண்டிய டி20 கிரிக்கெட்டில் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடும் இவர் இந்த தொடரில் 5 இன்னிங்ஸ்சில் வெறும் 35.60 என்ற சுமாரான சராசரியில் ரன்களை குவித்தார்.

Williamson

குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் 46 (42) ரன்களை எடுத்த அவர் மெதுவாக விளையாடியது தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதனால் விமர்சனங்களை சந்தித்துள்ள இவர் 2024இல் 37 வயதை தொட்டு விடுவார் என்பதால் அடுத்த டி20 உலக கோப்பைக்கு முன்பாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

4. தெம்பா பவுமா: சமீப காலங்களாகவே டி20 கிரிக்கெட்டில் மோசமான ஃபார்மில் தவிக்கும் இவர் இந்த உலக கோப்பையில் 5 போட்டிகளில் வெறும் 70 ரன்களை மட்டுமே எடுத்து தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

Bavuma-1

அதிலும் புத்துணர்ச்சி பெற்று வரும் தென்னாப்பிரிக்க அதிரடிப்படையில் பாரத்தை ஏற்படுத்துபவராக இருக்கும் இவரை அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள். எனவே 32 வயதானாலும் அடுத்த டி20 உலக கோப்பைக்கு முன்பாக டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இவர் கவனம் செலுத்துவதை பார்க்க அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

3. சாகிப் அல் ஹசன்: வங்கதேசத்தின் நம்பிக்கை நட்சத்திரமான இவர் இந்த உலக கோப்பையில் 5 இன்னிங்ஸ்சில் வெறும் 44 ரன்களையும் 6 விக்கெட்டுகளையும் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டார்.

Shakib-3

சமீபத்திய ஆசியக் கோப்பை உட்பட சமீப காலங்களில் இப்படி சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இவர் அடுத்த உலகக் கோப்பையில் 37 வயதை தொட்டு விடுவார் என்பதால் அதற்கு முன்பாக டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

2. ஆரோன் பின்ச்: ஒரு காலத்தில் அதிரடிக்கு பெயர் போன இவர் கடந்த வருடம் முதல் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு கேப்டனாக டி20 உலக கோப்பையை வென்று அசத்தினார். ஆனால் சமீப காலங்களில் சுமாரான பார்மில் தவிக்கும் இவர் சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்கும் வாய்ப்பை நழுவ விட்டதுடன் பேட்டிங்கிலும் சுமாராகவே செயல்பட்டதால் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Finch

ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ள இவர் விரைவில் 36 வயதை தொடுவதால் அடுத்த டி20 உலக கோப்பையில் சாதாரண வீரராக கூட விளையாடுவதை பார்ப்பது கடினம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1. ரோஹித் சர்மா: 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றதால் தோனியை விட மகத்தான கேப்டன் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த இவர் இந்த உலகக் கோப்பையில் பேட்டிங்கில் வெறும் 116 ரன்களை எடுத்து சொதப்பியதுடன் கேப்டனாக சுமாராக செயல்பட்டது இந்தியாவின் 15 வருட டி20 உலகக்கோப்பை கனவை மீண்டும் உடைத்தது. அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் இவர் கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கைகள் குவிந்துள்ளன.

Rohit Sharma IND

சொல்லப் போனால் ஏற்கனவே பிசிசிஐ மறைமுகமாக பாண்டியாவை நியூசிலாந்து தொடரில் டி20 கேப்டனாக அறிவித்துள்ளது. மேலும் ஐபிஎல் 2022 தொடரில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு அரை சதம் கூட அடிக்காதது உட்பட சமீப காலங்களில் பேட்டிங்கில் ரொம்பவே திணறும் இவர் 2024இல் 37 வயதை தொட்டு விடுவார் என்பதால் அதற்கு முன்பாக டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதை பார்ப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.

Advertisement