5 மிகப்பெரிய உலக சாதனை படைத்த இந்திய வீரர்களை தெரியுமா..!

indiann5
- Advertisement -

கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை பல்வேறு சாதனைகள் நிகழ்ந்தேறியுள்ளது. நமது இந்திய வீரர்களும் பல சாதனைகளை செய்துள்ளனர். அதில் ஒரு சில வீர்கள் செய்த சாதனைகள் இன்று வரை முறியடிக்கப்படாமல் தான் இருக்கிறது. அந்த வரிசையில் நமது கிரிக்கெட் வீரர்கள் வசப்படுத்தியுள்ள தனித்துவமான சாதனைகளை பற்றி இங்கே பார்க்கலாம்.

babu

1. பாபு நாட்கர்ணி :- கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து மேடின் ஓவர் வீசிய ஒரே வீரர் இவர் தான். இந்திய அணியில் 1955 – 1968 ஆண்டு வரை விளையாடி வந்த இந்த சூழல் பந்து வீரர்,1964 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் தொடர்ந்து 21 மேடின் ஓவர்களை வீசியுள்ளார். அதாவது தொடர்ந்து 131 பந்துகளை வீசி ரன் எதுவும் அளித்திடாமல் இருந்திருக்கிறார்.

- Advertisement -

2. இர்பான் பதான்:- டெஸ்ட் போட்டியில் முதல் ஒவேரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2006 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் ஓவரை வீசிய இர்பான் பதான், 4வது பந்தில் சல்மான் பட் , 5 வது பந்தில் யூனிஸ் கான் , 6 வது பந்தில் மொஹமத் யூசப் என்று தொடந்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுவரை வேறு எந்த ஒரு வீரரும் இந்த சாதனையை படைத்தது இல்லை.

dhonipathan

3. மஹிந்திரா சிங் தோனி :- கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஒவர்களை வீசிய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதுவரை 318 ஒருநாள் போட்டிகள், 90டெஸ்ட் போட்டிகள் மற்றும் 89 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி , இதுவரை 9 போட்டிகளில் பந்து வீசியுள்ளார். இந்த சாதனையை வேறு எந்த விக்கெட் கீப்பரும் செய்ததில்லை.

- Advertisement -

4. ரோஹித் ஷர்மா:- அதிக இரட்டை சத்தத்தை அடித்த ஒரே வீரர் . இதுவரை ஒருநாள் தொடர் வரலாற்றில் 7 இரட்டை சதங்கள் மட்டுமே பதிவாகியுள்ளது. அதில் ரோஹித் ஷர்மா 3 இரட்டை சததிற்கு சொந்தக்காரராக இருக்கிறார். 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் 209 எடுத்து சச்சின் மற்றும் சேவாக் ஆகியோருடன் இணைந்தார். பின்னர் இலங்கைக்கு எதிரான போட்டியில் 264 ரன்களை எடுத்து, ஒரு நாள் வரலாற்றில் அதிக ரன் குவித்த என்ற வீரர் என்ற சாதனையை படைத்தார்.

rohitsachin

5. சச்சின் டெண்டுல்கர்;- கிரிக்கெட் உலகில் சச்சின் பல சாதனைகளை செய்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றிலே 100 சதத்தை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை கொண்டவர் இந்த கிரிக்கெட் ஜாம்பவான். 2012 ஆம் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தனது 100 வது சதத்தை பூர்த்தி செய்து சாதனை படைத்தார்.

Advertisement