ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை இந்தியா நிச்சயம் தோற்கடிக்கும் என சொல்வதற்கான 4 முக்கியமான காரணங்கள்

pakisthan IND vs PAK
- Advertisement -

புகழ்பெற்ற ஆசிய கோப்பை 15ஆவது முறையாக ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியாவில் விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கோப்பையை வெல்ல போராட உள்ளன. இருப்பினும் இத்தொடரில் எஞ்சிய அணிகளை காட்டிலும் வலுவான அணிகளாக திகழும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிக்கு தான் உலக அளவில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இவ்விரு அணிகளும் கடைசியாக இதே துபாயில் மோதியபோது உலக கோப்பையில் இந்தியாவை முதல் முறையாக தோற்கடித்த பாகிஸ்தான் வரலாற்றை மாற்றி எழுதியது. அதனால் அவமானத்தை சந்தித்த இந்தியா இம்முறை அதற்கு தக்க பதிலடி கொடுக்க தயாராகியுள்ளது. ஆனாலும் தங்களது 2வது வீடாக கருதப்படும் துபாய் கால சூழ்நிலைகளை பயன்படுத்தி மீண்டும் இந்தியாவை தோற்கடிப்போம் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் சவால் விடுத்து வருகின்றனர்.

4 காரணங்கள்:
இருப்பினும் பாகிஸ்தானை தோற்கடித்து இந்த கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை இந்தியா தக்க வைத்துக்கொள்ளும் என்று உறுதியாகச் சொல்வதற்கான 4 நிதர்சனமான காரணங்களைப் பற்றிப் பார்ப்போம்:

shaheen afridi

1. ஷாஹீன் அப்ரிடி: கடந்த முறை வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இவர் இம்முறை கடைசி நேரத்தில் காயத்தால் விலகியது இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நிம்மதியை கொடுத்திருக்கும் என முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் தெரிவித்திருந்தது இந்திய ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும் அதுதான் உண்மை என்பதை மறுக்க முடியாது.

- Advertisement -

ஏனெனில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் புதிய பந்தில் ஸ்விங் செய்து ராகுல், ரோஹித் ஆகியோரை பவர்பிளே ஓவரில் காலி செய்து அரை சதமடித்து வெற்றிக்கு போராடிய விராட் கோலியையும் அவுட் செய்து கடந்த வருடம் வரலாற்று தோல்விக்கு முக்கிய பங்காற்றினார். ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடமாகியும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களிடம் இந்திய டாப் ஆர்டர் திணறுவது இன்னும் மாறவில்லை.

Topley

சமீபத்திய இங்கிலாந்து தொடரில் ரீஸ் டாப்லி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓபேத் மெக்காய் ஆகியோரிடம் ரோகித் சர்மா போன்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானது அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். மொத்தத்தில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களிடம் இந்திய டாப் ஆர்டர் தடுமாறுவது இன்னும் மாறாத நிலையில் ஷாஹீன் அப்ரிடியை தவிர வேறு இடதுகை பந்து வீச்சாளர்கள் இல்லாத பாகிஸ்தானுக்கு இது பாதகத்தையும் இந்தியாவுக்கு சாதகத்தையும் ஏற்படுத்தப்போகிறது.

- Advertisement -

2. பலவீனமான மிடில்: அதேபோல் கடந்த வருடம் பாபர் அசாம் – முஹம்மது ரிஸ்வான் ஆகியோர் 150+ ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அவுட்டே ஆகாமல் இந்தியா தோல்வியடைய முக்கிய பங்காற்றியதை யாரும் மறுக்க முடியாது. அந்த வகையில் அந்த இருவருடன் பகார் ஜமான் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக உள்ளார். ஆனால் முதல் 3 இடங்களில் விளையாடும் இவர்களை தவிர்த்து மிடில் ஆர்டரில் விளையாடும் ஹைதர் அலி, குஷ்தில் ஷா, இஃப்திகார் அஹமத் போன்றவர்கள் அனுபவம் வாய்ந்த உலகத்தர வீரர்களாக இல்லை.

Rizwan

அந்த வகையில் பாகிஸ்தானின் டாப் ஆர்டர் வலுவாகவும் மிடில் ஆர்டர் பலவீனமாக இருப்பது அந்த அணிக்கு நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தும். ஏனெனில் அனைத்து நாட்களிலும் பாபர் அசாம் போன்றவர்களால் சிறப்பாக செயல்பட முடியாது என்ற நிலைமையில் ஆரம்பத்திலேயே ஒருசில விக்கெட்டுகளை இந்தியா எடுத்தால் தோல்வி கிடைத்துவிடும்.

- Advertisement -

3. வலுவான மிடில்: அப்படியே நேர்மாறாக இந்திய பேட்டிங் வரிசையின் மிடில் ஆர்டர் மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. குறிப்பாக ராகுல், ரோஹித், விராட் என டாப் ஆர்டரில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் பலமாக இருக்கிறார்கள். பாகிஸ்தானில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாத நிலைமையில் நிச்சயம் இவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்பலாம்.

Dinesh-Karthik-and-Hardik-Pandya

ஒருவேளை அவர்கள் சொதப்பினாலும் அப்படியே தாங்கிப் பிடித்து சரிவை சரிசெய்யும் அளவுக்கு சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா மற்றும் தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்களை கொண்ட இந்திய மிடில் ஆர்டர் உலகத்தரம் வாய்ந்ததாக கொண்டுள்ளது. மேலும் சமீபத்திய தொடர்களில் இந்த அனைவருமே மிகச் சிறப்பாக செயல்பட்டு நல்ல பார்மில் இருப்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய பலமாகும்.

4. சுழலில் வித்யாசம்: அதேபோல் ஷாஹீன் அப்ரிடி – ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இல்லாததால் இரு அணியின் வேகப்பந்து வீச்சு கிட்டத்தட்ட சமம் என்று கூறலாம். ஆனால் டி20 கிரிக்கெட்டில் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுத்து போட்டியை கட்டுப்படுத்தக்கூடிய சுழல் பந்துவீச்சு கூட்டணியை பொருத்தவரை பாகிஸ்தான் பலவீனமாகவே உள்ளது.

IND vs ENG Rohit Sharma Yuzvendra Chahal

அந்த அணியில் இருக்கும் சடாப் கான், உஸ்மான் காதர் ஆகியோர் யுஸ்வென்ற சஹால், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு நிகராக அனுபவம் உலகத்தரம் வாய்ந்த சுழல் பந்துவீச்சாளர்கள் கிடையாது. அதுபோக ரவி பிஷ்னோய், தீபக் ஹூடா ஆகிய இளம் வீரர்களும் சமீபத்திய போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு இந்திய சுழல் பந்துவீச்சை இருமடங்கு பலப்படுத்துகிறார்கள்.

Advertisement