இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை வெல்ல 4 காரணங்கள் – லிஸ்ட் இதோ

Williamson-1

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி, இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டன் மைதானத்தில் வருகிற ஜூன் மாதம் 18ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கான இந்திய அணி கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் அறிவிக்கப்பட்டது. பேட்டிங் பௌலிங் என இரண்டிலுமே சம பலத்துடன் காணப்படும் இந்திய அணி, இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற நான்கு காரணங்கள் இருக்கின்றன. அவற்றை நாங்கள் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

Rahane

சௌத்தாம்டன் மைதானம்:

- Advertisement -

இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் சௌத்தாம்டன் மைதானம், இந்திய அணியின் கேப்டனான விராட் கோலிக்கும் மற்றும் துணை கேப்டனான அஜிங்கிய ரஹானேவுக்கும் மிகவும் பிடித்தமான மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் ரஹானேவின் சராசரி 56 ஆகவும், விராட் கோலியின் சராசரி 42 ஆகவும் இருக்கிறது. எனவே சௌத்தாம்டன் மைதானத்தில் இந்த இருவரின் விக்கெட்டுகளை அவ்வளவு எளிதாக நியூசிலாந்து அணியின் பௌலர்களால் எடுத்துவிட முடியாது. மேலும் கோலி மற்றும் ரஹானேவின் பார்ட்னர்ஷிப் அற்புதமாக அமைந்தால் இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை அடிக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

Ashwin 1

நீண்ட பேட்டிங் வரிசை:

- Advertisement -

இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஷ்வின் வரை சிறப்பாக பேட்டிங் விளையாடக் கூடியவர் என்பதால் இந்திய அணியானது நீண்ட பேட்டிங் வரிசையை கொண்ட அணியாகத்தான் களமிறங்கப்போகிறது. மேலும் ரிஷப் பன்டின் சமீபத்திய நிலையான ஆட்டமும், ரவீந்திர ஜடேஜாவின் வருகையும் இந்திய மிடில் ஆர்டர் பேட்டிங்கை மேலும் வலுப்படுத்தியுள்ளது. கடந்த ஆஸ்திரேலியா தொடர் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் என இரண்டு தொடரிலுமே அற்புதமாக பேட்டிங் ஆடி அசத்தல் பார்மில் இருக்கும் அஷ்வின், இந்த போட்டியிலும் மற்ற முன்னனி வீரர்களுக்கு தனது பேட்டிங்கின் மூலம் கைகொடுப்பார் என்றே தெரிகிறது.

Bumrah

அற்புதமான வேகப்பந்து வீச்சு:

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள், கடந்த பல வெளிநாட்டு தொடர்களில் அற்புதமாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளனர். ஜாஸ்பிரித் பும்ரா, இஷாந் சர்மா, முஹம்மது ஷமி ஆகிய மூன்று வேகப் பந்து வீச்சாளர்களும் வெளிநாட்டு ஆடுகளங்களில் மிக அற்புதமாக பந்து வீசி இருக்கின்றனர் என்பதோடு மட்டுமல்லாமல் அனைத்து வெளிநாட்டு தொடர்களிலும் இந்த மூவரும் சீரான இடைவெளிகளில் எதிரணி விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கின்றனர். மேலும் முஹம்மது சிராஜ், ஷர்துல் தாக்கூர் போன்ற இளம் வேகப் பந்து வீச்சாளர்களும் இந்திய அணிக்காக சிறப்பாக பந்து வீசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர்களில் பெற்ற வெற்றி:

ஒரு போட்டியில் வெற்றிபெற உடல் வலிமையை விட மன வலிமை தான் அதிகமாக தேவைப்படும். சென்ற ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெற்ற வெற்றி மற்றும் இந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக பெற்ற வெற்றிகளால் இந்திய அணி வீரர்கள் அனைவரும் அதிக மன வலிமையில் இருக்கின்றனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் ஆஸ்திரேலிய தொடரின்போது முன்னனி வீரர்கள் பலர் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனாலும், இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடி ஆஸ்திரேலியா தொடரைக் கைப்பற்றியது. இந்திய அணி அதே நம்பிக்கையுடன் இந்த இறுதிப் போட்டியிலும் விளையாடும் என்பதில் எந்த முரண்பாடும் இல்லை.

Advertisement