ஐசிசி டி20 உ.கோ இந்திய அணியில் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் 4 காராணிகள் – விவரம் இதோ

IND
Advertisement

வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் நம்பர் ஒன் டி20 அணியாகவும் நடப்பு சாம்பியனாகவும் எளிதாக கோப்பையை வெல்லும் அணியாகவும் சமீபத்திய ஆசிய கோப்பையில் களமிறங்கிய இந்தியா வழக்கம்போல அழுத்தமான சூப்பர் 4 சுற்றில் சொதப்பி பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது. அதனால் இங்கேயே கோப்பையை வெல்ல முடியாத இந்தியா ஆஸ்திரேலியாவில் எங்கே உலகக்கோப்பையை வெல்லப் போகிறது என்று கவலை அடைந்துள்ள ரசிகர்களுக்கு கிட்டதட்ட அதே அணி மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதால் என்ன நடக்கப்போகிறதோ என்ற கலக்கம் நிலவுகிறது. சரி உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள அணியால் கவலையும் அக்கறையும் பட வேண்டிய சில காரணிகளை பற்றி பார்ப்போம்:

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul

1. டாப் ஆர்டர்: இந்திய டாப் ஆர்டரில் ரோகித் சர்மா, ராகுல், விராட் கோலி ஆகிய உலகத்தரம் வாய்ந்தவர்கள் இருந்தாலும் அதுவே இந்திய ரசிகர்களுக்கு கலக்கத்தையும் கொடுக்கிறது. ஏனெனில் இதில் விராட் கோலி பார்முக்கு திரும்பி விட்ட நிலையில் தற்சமயத்தில் ராகுல் சுமாரான பார்மில் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடுபவராகக உள்ளார். அதேபோல் ரோஹித் சர்மாவும் அதே பழைய பன்னீர்செல்வமாக இல்லாமல் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

அதுபோக இந்த மூவருமே வேகம், பவுன்ஸ் ஆகிய அம்சங்களுக்கு கை கொடுக்க கூடிய ஆஸ்திரேலிய மைதானங்களில் மிட்செல் ஸ்டார்க், சாஹீன் அப்ரிடி, ட்ரெண்ட் போல்ட் போன்ற தரமான இடதுகை பந்துவீச்சாளர்கள் புதிய பந்தை ஸ்விங் செய்து துல்லியமாக பந்து வீசினால் மொத்தமாக சாய்வதில் இன்னமும் முழுமையான முன்னேற்றத்தைக் காணவில்லை. எனவே இம்முறை அதை மனதில் வைத்துக்கொண்டு இவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

DK and Pant

2. கார்த்திக் – பண்ட்: சொந்தபினாலும் அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பராக வளர்க்க நினைக்கும் ரிஷப் பண்ட்டா அல்லது தற்சமயத்தில் நல்ல பார்மில் இருப்பதால் விளையாடி விட்டு அடுத்த வருடம் வெளியேறக்கூடிய தினேஷ் கார்த்திக்கா என்ற நிலைப்பாட்டில் உறுதியான முடிவை எடுக்க முடியாமல் அணி நிர்வாகம் திண்டாடி வருகிறது. மேலும் ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் கொண்ட ரிஷப் பண்ட் அணியில் ஒரே இடதுகை பேட்ஸ்மேனாக இருப்பதால் அவரை நீக்குவதற்கு யோசிக்க வேண்டியுள்ளது.

- Advertisement -

ஆனால் ஆசிய கோப்பையில் வெற்றியை தீர்மானிக்கும் 15 – 20 ரன்களை எடுக்கத் தவறியதால் தோல்வியை சந்திக்க நேரிட்ட ரன்களை எடுக்கக்கூடிய தினேஷ் கார்த்திக் வயதை தாண்டி நல்ல பினிஷெராக இருப்பதால் கழற்றி விட முடியாமல் நிர்வாகம் தவிக்கிறது. இந்த பிரச்சனைக்கு எளிதான தீர்வு என்னவெனில் ஒன்று ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் என்ற முடிவை இந்த உலகக்கோப்பையில் எடுக்க வேண்டும். ஆனால் இருவரையும் வைத்து விளையாடுவது நிச்சயம் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாகவே அமையும்.

Ravindra-Jadeja

3. லோயர் ஆர்டர்: கேப்டன் ரோகித் சர்மா பொறுப்பேற்றதும் என்ன நடந்தாலும் அதிரடியை கைவிடக்கூடாது என்ற புதிய அணுகுமுறையில் இந்தியா பயணிக்க நினைக்கிறது. அதற்கு அனைத்து நேரங்களிலும் டாப் மற்றும் மிடில் ஆர்டர் கை கொடுக்க முடியாது என்ற நிலைமையில் லோயர் மிடில் ஆர்டர் வலுவாக இருப்பது அவசியமாகிறது. இந்த பிரச்சனை ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறியது மேலும் அதிகமாகியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் லோயர் ஆர்டரை வலுவாக்க தினேஷ் கார்த்திக்கை சேர்த்தால் அவர் பந்து வீச தெரியாதவராக உள்ளார். அதற்காக தீபக் ஹூடாவை சேர்த்தால் அவர் இதற்கு முன் லோயர் மிடில் ஆர்டரில் விளையாடிய அனுபவம் இல்லாததுடன் ஆஸ்திரேலியாவில் பந்து வீசிய அனுபவமில்லாதவர். எனவே அக்சர் படேலை சேர்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் அவரும் ஆஸ்திரேலியாவில் இதற்கு முன் எந்த ஒரு டி20 போட்டியிலும் விளையாடியதில்லை.

Axar Patel and Hardik Patel

அதேபோல் வேகப்பந்து வீச்சு துறையில் புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் ஆகியோர் கணிசமான ரன்களை எடுத்தாலும் உறுதியாக ரன்களை எடுப்பார்கள் என்று சொல்ல முடியாது. எனவே பாண்டியா, தினேஷ் கார்த்திக் போன்ற பினிசர்கள் ஏமாற்றினாலும் அதை சமாளித்து வெற்றியை தீர்மானிக்க கூடிய அந்த கடைசிகட்ட 10 – 20+ ரன்களை எடுக்கும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை பந்துவீச்சு துறையை பாதிக்காத அளவுக்கு தேர்வு செய்வது முக்கியமாகிறது.

- Advertisement -

4. லெப்ட் ஆர்ம்: ஆஸ்திரேலியாவில் இடது கை பவுலர்கள் எப்போதுமே தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். ஆனால் இந்திய அணியில் பும்ரா, ஹர்ஷல், புவனேஸ்வர் என 3 முதன்மை பவுலர்களுமே வலதுகை பவுலர்களாக உள்ளனர். அர்ஷிதீப் சிங் மட்டுமே இடதுகை பவுலராக உள்ளார்.

Arshdeep-Singh

அதனால் இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவமில்லாத அவரை சேர்க்கலாமா அல்லது சமீபத்திய ஆசிய கோப்பையில் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு முக்கிய பங்காற்றினாலும் அனுபவத்தை மதித்து புவனேஷ்வர் குமாருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கலாமா என்பதை அணி நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும்.

Advertisement