இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 3 சர்ப்ரைஸ்ஸான வீரர்கள் – லிஸ்ட் இதோ

Ind-1
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடியது. இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என கைப்பற்றியது. இதன் பின் நடைபெற்ற டி20 மற்றும் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ஜனவரியில் நாடு திரும்பிய இந்திய அணி அடுத்தாக பிப்ரவரியில் இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது.

IND-1

- Advertisement -

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் என மிகப்பெரிய தொடரில் விளையாட உள்ளது. இதில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 5ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மார்ச் 12ம் தேதி அகமதாபாத் மைதானத்திலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 23ம் தேதி புனே மைதானத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகள் இரு அணிகளின் தரப்பிலிருந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெறும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி பிசிசிஐ அறிவித்திருக்கிறது. இதில் ஸ்பெஷலாக சேர்க்கப்பட்ட 3 வீரர்கள் பற்றி பார்ப்போம்.

pandya 2

ஹார்டிக் பாண்டியா :

- Advertisement -

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு ஏற்பட்ட காயத்திற்கு பிறகு அவரால் பழையபடி பவுலிங் வீச முடியவில்லை. இதனால் டெஸ்ட் போட்டிகளில் அவரால் இடம் பெற முடியவில்லை. தற்போது ஐபிஎல் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடியதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெற்றிருக்கிறார்.

axar

அக்சர் படேல் :

- Advertisement -

2014-15 ஆண்டுகளில் அக்சர் படேல் இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக விளையாடி வந்தார். ஆனால் ரவீந்திர ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தால் அக்சர் படேலுக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அக்சர் படேலுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Sundar-1

வாஷிங்டன் சுந்தர் :

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக இந்திய அணியில் இடம் பெற்றார். இவர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக காபா டெஸ்ட் போட்டியில் இடம்பெற்ற விளையாடினார். இதில் தனது முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை வீழ்த்தி ஒரு அரை சதங்கள் விளாசி சிறப்பாக விளையாடி இருந்தார். இதன் காரணமாகவே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்து இருக்கிறது.

Advertisement