பல சிறப்பான வீரர்கள் இருந்தும் பெங்களூரு அணி ஒருமுறை கூட ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றாததுக்கு காரணம் – லிஸ்ட் இதோ

Kohli
- Advertisement -

இதுவரை 12 ஐபிஎல் தொடர்களில் நடைபெற்று முடிந்து விட்டன. மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்று முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு முறையும் ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை வென்று இருக்கின்றன.

rcb 2

- Advertisement -

ஆனால் வருடாவருடம் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தற்போது வரையில் ஒரு கோப்பை வென்றதில்லை. ஒருமுறை இறுதிப்போட்டிக்கு சென்றிருக்கிறது அவ்வளவுதான். இந்த அணி ஏன் தற்போதுவரை கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது என்பது குறித்த காரணங்களை தற்போது பார்ப்போம்.

அணியை சரியாக தேர்வு செய்யாமை :

இந்த அணியில் கிறிஸ் கெயில், கேஎல் ராகுல், ஏபி டிவில்லியர்ஸ், விராட் கோலி, மிட்செல் ஸ்டார்க் அதுபோக மிகச்சிறந்த உள்ளூர் வீரர்கள் பலர் விளையாடியிருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் சரியான அணி கட்டமைப்பு இல்லாமல் விளையாடி பலமுறை தோற்றிருக்கிறது. பல நேரத்தில் முக்கியமான வீரர்களை விட்டுவிட்டு தேவையில்லாத வேலைகளை இந்த அணி நிர்வாகம் செய்து இருக்கிறது. இது இந்த அணிக்கு மிகப்பெரிய தோல்விக்கு காரணம்

- Advertisement -

வீரர்களை சரியாக கையாளாமை :

பல மிகச் சிறந்த வீரர்கள் இந்த அணிக்கு ஆடி இருந்தாலும் வீரர்களையும் சரியாக பயன்படுத்தாமல் அவர்களுக்கு அதிக வேலைப்பளு கொடுத்து பல போட்டிகளில் இந்த அணி தோற்று இருக்கிறது. கேஎல் ராகுல், ஷேன் வாட்சன், குவின்டன் டி காக் போன்ற பல திறமை வாய்ந்த உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் கூட விராட் கோலியின் தலைமையில் அதிகமாக விளையாடி சோடை போய் இருக்கின்றார்கள். இதுவும் அந்த அணியின் தோல்விக்கு ஒரு மிகப்பெரிய காரணம்.

rcb

நிரந்தரமான ஆடும் லெவன் இல்லாதது :

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளை பார்த்தால் கிட்டத்தட்ட 8 முதல் 10 வீரர்களை எப்போதும் ஆடவைக்கும். அதிகபட்சம் மூன்று வீரர்கள் மட்டும் தான் ஒரு தொடருக்கு மாற்றும். ஆனால் ராயல் சாலஞ்சர்ஸ் டெல்லி போன்ற அணிகளை பார்த்தோமேயானால் ஒவ்வொரு போட்டிக்கும் ஐந்து முதல் ஆறு வீரர்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இதனால் ஒவ்வொரு வீரருக்கும் எப்படி இந்தியாவில் சரியாக விளையாடுவது? எப்படி நிலைத்து நிற்பது? என்று தெரியாமல் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகி சரியாக விளையாடாமல் போயுள்ளனர் இதுவும் அந்த அணியின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம்.

Advertisement