
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் பி.சி.சி.ஐ-யிடம் கோரிக்கை வைத்ததாக பல்வேறு தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஏற்கனவே இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த வேளையில் விராட் கோலியின் இந்த அறிவிப்பும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னதான் விராட் கோலி இப்படி தனது ஓய்வு குறித்த விருப்பத்தை அறிவித்திருந்தாலும் பிசிசிஐ அவரது முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சற்று தடுமாற்றத்தை சந்தித்திருக்கும் வேளையில் இந்திய அணியின் அனுபவ வீரர்களான இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியேறினால் நிச்சயம் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படுத்தும் என்பதனால் விராட் கோலி தனது முடிவிலிருந்து மாற வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் இருந்தும் அவருக்கு வேண்டுகோள்கள் குவிந்து வருகின்றன.
கடைசியாக நடைபெற்ற நியூஸிலாந்து தொடர் மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்து இருந்த வேளையில் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரினை குறி வைத்து இந்திய அணி எதிர்வரும் 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முதல் முயற்சியாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் விலையாட இருக்கிறது. அப்படி இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக அவரது இடத்தை நிரப்பப்போகும் 3 வீரர்கள் யார்? என்பது குறித்த தகவலை இங்கு காணலாம்.
1) சாய் சுதர்சன் : தற்போது ஐ.பி.எல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் தமிழக இடதுகை ஆட்டக்காரரான சாய் சுதர்சன் உள்ளூர் போட்டிகளிலும் மிகச் சிறப்பாக விளையாடி 29 லிஸ்ட் ஏ போட்டிகளில் 1957 ரன்கள் குவித்துள்ளதால் அவர் நிச்சயம் இந்திய அணிக்கு வெகு விரைவில் அழைக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை அப்படி அவருக்கு வாய்ப்பு கொடுக்கும் பக்கத்தில் விராட் கோலியின் இடத்தை நிரப்ப அவரால் முடியும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
2) துருவ் ஜுரேல் : 24 வயதான துருவ் ஜுரேல் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 40 ரன்கள் சராசரியுடன் 202 ரன்கள் குவித்திருக்கும் வேளையில் தான் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பது மட்டுமின்றி மிடில் ஆர்டரிலும் சிறப்பாக விளையாடக்கூடியவர் என்று தனது பேட்டிங் எபிலிட்டியை அவர் நிரூபித்துள்ளதால் அவருக்கும் விராட் கோலியின் இடத்தை நிரப்பும் வாய்ப்பு காத்திருக்கிறது.
இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடர் மீண்டும் துவங்கும் போது பஞ்சாப் – டெல்லி போட்டி நடைபெறுமா? – ரிசல்ட் என்ன ஆகும்?
3) கருண் நாயர் : இந்திய அணிக்காக ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி முச்சதம் அடித்த அவர் கடந்த பல ஆண்டுகளாகவே மீண்டும் தனது வாய்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் உள்ளூர் தொடர்களில் தற்போது மலை போல் ரன்களை குவித்து ஐபிஎல் போட்டிகளிலும் அசத்தி வருவதால் அவருக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தால் விராட் கோலியின் இடத்தை அவராலும் நிரப்ப முடியும் என்று பார்க்கப்படுகிறது.