கட்டம் முடிந்த நிலையில் இஷாந்த் சர்மா. அவரது இடத்திற்கு வரிசை கட்டி நிற்கும் 3 பவுலர்கள் – விவரம் இதோ

ishanth 2
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 306 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 2016 ஆம் ஆண்டிற்கு பிறகு விளையாடாமல் இருக்கும் அவர் 80 போட்டிகளில் 115 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி டி20 போட்டியிலும் 14 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Ishanth

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டாலும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். 102 போட்டிகளில் விளையாடியுள்ள 32 வயதாகும் இஷாந்த் ஷர்மா தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. மேலும் இதுவரை அவர் நூற்றுக்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 306 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளதால் இனியும் அவர் இந்திய அணிக்கு தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

32 வயதாகும் அவருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளிப்பதற்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளரை அணிக்குள் கொண்டு வரலாம் என்று நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியின்போது விரலில் காயம் ஏற்பட்ட இசாந்த் ஷர்மா தற்போது பத்திற்கும் மேற்பட்ட தையல்கள் விரலில் போட்டுள்ளது. இருப்பினும் அவர் இங்கிலாந்து தொடருக்கு முன்னர் குணமடைந்து விடுவார் என்று மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ishanth 1

இருந்தாலும் அவர் விளையாட வாய்ப்பு இல்லை என்றும் அவருக்கு பதில் அந்த இடத்திற்கு மூன்று இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு இணைய காத்திருக்கிறார்கள். அதன்படி இஷாந்த் சர்மாவிற்கு மாற்று வீரர்களாக முகமது சிராஜ், நவ்தீப் சைனி மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் வரிசையில் இருக்கின்றனர். பல ஆண்டுகளாகவே டெஸ்ட் அணியில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இசாந்த் சர்மாவிற்கு இனி வாய்ப்பு கிடைக்காமல் போகும் பட்சத்தில் நிச்சயம் இந்த மூவரில் ஒருவர் அவரது இடத்தை பிடிப்பார்கள்.

siraj 2

அதிலும் குறிப்பாக இஷாந்த் ஷர்மாவின் இடத்தை பிடிக்க சிராஜிக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகமான அவர் தொடர்ச்சியாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக சிராஜ் மற்றும் அவரை தொடர்ந்து இரு வீரர்கள் என மூவர் அந்த இடத்திற்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement