டி20 அணியில் இடம்பெற்றிருந்தாலும் இந்த 3 பேருக்கும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காதாம் – லிஸ்ட் இதோ

INDvsENG

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் சமீபகாலங்களாக சில நல்ல வீரர்களை இந்திய அணிக்கு தந்து உள்ளது. கனவோடு இருக்கும் வீரர்கள் தங்கள் திறமையை சரியாக காட்டி தங்களுக்கு இந்திய அணியில் ஆடும் வாய்பபை உருவாக்கிக் கொள்ள சிறந்த அடித்தளமாக இருந்து வருகிறது. பல்லேறு வீரர்கள் இவ்வாறு இந்திய அணிக்கு பரிசாக கிடைத்துள்ளனர்.அஸ்வன் , பும்ரா , ஹர்திக் பாண்டியா ஆகியோர் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டான வீரர்கள். இந்நிலையில் இந்திய இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கடந்த சில வருடங்களாக ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி வரும் சில வீரர்களை தேசிய அணியின் தேர்வாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பி.சி.சி.ஐ இந்த முறை ஒரு புதிய டி20 அணியைக் கொண்டு வந்துள்ளது.இதில் நன்றாக ஆடும் வீரர்களுக்கு உலக கோப்பையிலும் சான்ஸ் குடுக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. என்னதான் புதிய வீரர்கள் வந்தாலும் அவர்களுக்கு அணியில் இடம் இல்லாதது போன்றே தெரிகிறது. காரணம் சீனியர் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களே அவர்களுக்கு மாற்றாக இந்த வீரர்கள் விளையாடுவது கடினமே. எனவே தேசிய அழைப்பு கிடைத்தும் ஆடாமல் பெஞ்சில் உட்கார போகும் அந்த வீரர்கள் :

அக்ஷர் படேல் :

அக்ஷர் களமிறங்கிய வேளையில் பல சீனியர் வீரர்கள் நல்ல ஃபார்மில் இருந்ததால் இவருக்கு அவ்வளவாக வாய்ப்பு கிடைக்கவில்லை.அக்ஷர் 11 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுவரை 9 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் சிறப்பான ஆட்டம் காரணமாக வாய்ப்பு கிடைக்காமலேயே தோற்று போனார்.

axar 1

- Advertisement -

இந்த முறை பிசிசிஐ நிர்வாகம் அக்ஷர் படேலைத் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சேர்த்துள்ளது.ஆனால், இங்கிலாந்துக்கு எதிராக இதுவரை சிறப்பாக செயல்பட்ட சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் ஏற்கெனவே அணியில் உள்ள வேலையில் அக்ஷர் பெஞ்சில் உட்கார வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் தெவாட்டியா :

ஷெல்டன் காட்ரலின் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்க விட்டு 30 ரன்களை அடித்து அசத்திய ராகுல் தெவாட்டியா பற்றி நமக்கு தெரியும்.ஒரு நல்ல ஆல்ரவுண்டர் என்கிற அடிப்படையில் அவரை இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு பிசிசிஐ தேர்ந்தெடுத்துள்ளது. லெக்-ஸ்பின் பந்துவீச்சு திறன் கொண்ட ஆல்ரவுண்டரான ராகுல் தெவாட்டியா கடந்த சீசனில் சிறந்த ஃபார்மில் இருந்தார். கடந்த சீசனில் அவரது ரன்-ஆவரேஜ் 42.50 ஆகும். மேலும் 139.34 ஸ்டைரக் ரேட் விகிதத்தில் பேட்டை நன்கு வீசக்கூடிய அதிரடி திறனும் கொண்டிருக்கிறார்.

Tewatia

இருந்தாலும் ராகுல் அணியில் இடம் பெறுவது கேள்விக்குறி தான். அணியில் ஏற்கனவே பல சிறப்பான ஆல் ரவுண்டர் வீரர்கள் இருக்கிறார்கள் .எனவே தெவாட்டியா பெஞ்ச்சில் உட்கார வைக்க படுவார் என்றே தோன்றுகிறது.

இஷான் கிஷன் :

மும்பை அணிக்காக கடந்த சீசனில் சிறப்பாகவும் அதிரடியாகவும் ஆடி தனக்கென தனி பேன்ஃபேஸ் பிடித்து வைத்துள்ளார் இந்த பாக்கெட் டைனமோ.சமீபத்தில் கூட விஜய் ஹசாரேவில் ஜார்க்கண்ட்டுக்காக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான ஆடி வரும் இஷான் கிஷன் ஒரு போட்டியில் அதிரடியாக ஆடி 173 ரன்கள் எடுத்தார். இவரது அதிரடி ஃபார்முக்கு பரிசாக பிசிசிஐ இவரை இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு பிசிசிஐ தேர்ந்தெடுத்துள்ளது.

Ishan kishan

ஆனால் துரதிஸ்டவசமாக பண்டும் , ராகுலும் ஏற்கெனவே அணியில் உள்ள நிலையில் இவர் ஆட வாய்ப்பு கம்மியே. இவர் அப்படி ஆட வேண்டுமானால் அவர்கள் இருவரும் பெஞ்சில் உட்கார சம்மதிக்க வேண்டும். இதெல்லாம் நடக்குமா என தெரியவில்லை.எனவே இஷானும் பெஞ்ச்சில் உட்கார வைக்கப்படுவார்.