கேப்டன்ஷிப் செய்ய இந்த 3 பேர் உள்ளனர். பெங்களூரு அணியின் அடுத்த கேப்டன் யார் – ஆர்சிபி ரசிகர்களுக்கான பதிவு

RCB
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இந்த தொடரை இந்தியாவிலேயே நடத்துவதற்கு தேவையான அனைத்து வேலைகளிலும் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. அதில் முதல்கட்டமாக வழக்கமாக 7 – 8 நகரங்களில் நடைபெறும் இந்த தொடரை இந்த முறை மும்பை, புனே மற்றும் ஆமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதை அடுத்து ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் துவங்கி மே 29ம் தேதி வரை 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது.

RCB

- Advertisement -

இந்த முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளுடன் சேர்ந்து 10 அணிகள் பங்கு பெறுவதால் 74 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இதில் 70 லீக் சுற்றுப் போட்டிகள் மும்பை மற்றும் புனே நகரிலும் 4 போட்டிகள் கொண்ட பிளே ஆப் சுற்று போட்டிகள் அகமதாபாத் நகரிலும் நடைபெற உள்ளதாக தெரிகிறது.

ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு:
இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து 10 அணிகளும் தலா 5 அணிகள் கொண்ட குரூப் ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. முன்னதாக கடந்த 2013 முதல் அந்த அணியின் கேப்டனாக இருந்து வந்த நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு ஐபிஎல் கோப்பையை வாங்கி கொடுக்கவில்லை என தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த நிலையில் கடந்த வருடம் திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

RCB

இதன் காரணமாக காலியாக உள்ள அந்த அணியின் கேப்டன் பதவிக்கு தகுதியான வீரரை சமீபத்தில் நடந்த ஐபிஎல் 2022 ஏலத்தில் தேர்வு செய்ய அந்த அணி நிர்வாகம் திட்டமிட்டது. குறிப்பாக ஷ்ரேயஸ் ஐயரை எப்படியாவது வாங்கி கேப்டனாக நியமிக்க நினைத்த அந்த அணி நிர்வாகத்துக்கு போட்டியாக அதே நிலைமையில் தவித்து வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை ஏலத்தில் 12.25 கோடிகளுக்கு வாங்கி தங்கள் அணியின் கேப்டனாக நியமித்துள்ளது. அதன் காரணமாக ஐபிஎல் ஏலம் முடிந்து 2 வாரங்களான பின்பும் கூட அந்த அணி தனது கேப்டனை இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது. இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடருக்கு பெங்களூரு அணியின் கேப்டனாக செயல்பட தகுதியான 3 வீரர்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. பப் டு பிளேசிஸ்: தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் பஃப் டு பிளேசிஸ் கடந்த பல வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராக விளையாடி வந்தார். அதன் காரணமாக அவரை எப்படியாவது சென்னை மீண்டும் வாங்கும் என எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் பெங்களூர் அணி நிர்வாகம் உள்ளே புகுந்து அதிக விலை கொடுத்து தட்டி தூக்கியது. கடந்த சீசனில் 633 ரன்கள் குவித்து 4-வது முறையாக சென்னை சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றிய இவரை பெங்களூரு வாங்கியதில் அந்த அணிக்கு ஒரு மிகப்பெரிய பயன் ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம்.

Duplesis

ஏனெனில் தென் ஆப்பிரிக்காவுக்காக 36 டெஸ்ட், 39 ஒருநாள், 40 டி20 போட்டிகளில் ஏற்கனவே கேப்டன்ஷிப் செய்துள்ள அவரிடம் ஒரு அணியை வழி நடத்துவதற்கு தேவையான ஏகப்பட்ட அனுபவங்கள் நிறைந்துள்ளது. அத்துடன் ஐபிஎல் தொடரில் இதுவரை 100 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 2935 ரன்களைக் குவித்து நல்ல அனுபவத்தை கொண்டு உள்ளார். எனவே தற்போதைய நிலைமையை சமாளிக்க இவரை எந்தவித தயக்கமுமின்றி பெங்களூரு அணி நிர்வாகம் தங்களின் கேப்டனாக நியமிக்கலாம். சொல்லப்போனால் அந்த அணிக்கு இவர்தான் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக சமீபத்திய செய்திகள் காற்றில் உலா வருகின்றன.

- Advertisement -

2. தினேஷ் கார்த்திக்: தமிழகத்தின் நட்சத்திர அனுபவ கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழ்நாட்டு அணிக்காகவும் ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா போன்ற அணிக்காக ஏற்கனவே பலமுறை கேப்டன்ஷிப் செய்த அனுபவம் கொண்டவர். குறிப்பாக கடந்த வருடம் நடந்த உள்ளூர் டி20 தொடரான சயீத் முஸ்தாக் அலி கோப்பையில் தமிழக அணிக்காக கேப்டன்ஷிப் செய்து சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக் கொடுத்து தற்போது நல்ல பார்மில் உள்ளார்.

dinesh-karthik-bcci

இத்துடன் இவர் ஏற்கனவே பெங்களூர் அணிக்காக கடந்த 2015 ஆம் ஆண்டு 10.5 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு விளையாடியுள்ளார். எனவே அந்த அணியில் உள்ள விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்களை பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ள இவரிடம் அந்த அணி நிர்வாகம் கேப்டன்ஷிப் பொறுப்பை ஒப்படைத்தால் நிச்சயமாக முடிந்த அளவு முழுமூச்சாக செயல்பட்டு கோப்பையை வெல்ல பாடுபடுவார் என்பதில் சந்தேகமில்லை.

3. கிளேன் மேக்ஸ்வெல் : கடந்த வருடம் முதல் முறையாக பெங்களூர் அணிக்காக விளையாட துவங்கிய ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் 513 ரன்கள் குவித்து கடந்த வருடம் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக இந்த சீசனில் அவரை தக்க வைத்துள்ள பெங்களூரு அணி நிர்வாகம் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கேப்டன் பதவி அளிக்க நினைத்தால் தாராளாமாக இவருக்கு கொடுக்கலாம்.

maxwell

ஏனெனில் கடந்த 2017ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பேஷ் தொடரில் மெல்போர்ன் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதுவரை கேப்டனாக பெரிய அளவில் இவர் நிரூபிக்கவில்லை என்பதால் பெங்களூரு அணியின் கேப்டனாக இவர் நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு என கருதப்படுகிறது.

Advertisement