IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் ராகுலின் இடத்தை நிரப்ப காத்திருக்கும் – 3 வீரர்கள்

Rahul-1
- Advertisement -

இந்திய அணியின் இளம் அதிரடி துவக்க வீரரான கே.எல் ராகுல் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரினை அடுத்து இந்திய அணியில் தற்போது வரை இடம்பெறாமல் தவித்து வருகிறார். அவரது இந்த தாமதத்திற்கு காயம் ஒரு மிக முக்கிய காரணமாக மாறியது. ஏனெனில் ஐபிஎல் தொடரின் போது ராகுல் காயம் அடைந்திருந்த ராகுல் அடுத்ததாக நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடருக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

kl rahul

- Advertisement -

ஆனால் அந்த தொடரானது துவங்குவதற்கு முன்னதாகவே அவரது காயத்தின் தீவிரம் காரணமாக அணியில் இருந்து வெளியேறினார். பின்னர் தனது காயத்திற்காக ஜெர்மனி சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வு எடுத்துக்கொண்ட அவர் அடுத்ததாக நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான தொடர், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் என அடுத்தடுத்த தொடர்களை தவற விட்டார்.

அதன் பின்பு முறையான ஓய்விற்கு பின்னர் ஒரு வழியாக தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வரும் இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால் அந்த நேரத்தில் ராகுல் மீண்டும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்த போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் செல்லும் வாய்ப்பையும் அவர் தவற விட்டார். இதன் காரணமாக ஒருநாள் தொடரினை அவர் தவறவிட்டார். இப்படி காயம் மற்றும் கொரோனா என அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வரும் கே.எல்.ராகுல் நாள் தொடரை தவறவிட்டதை அடுத்து தற்போது டி20 கிரிக்கெட் தொடரிலும் விளையாட மாட்டார் என்று உறுதியாகி உள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக கே.எல் ராகுலுக்கு பதிலாக இந்திய டி20 அணியில் இடம் பெற வாய்ப்புள்ள மூன்று வீரர்களை பற்றி இங்கு காணலாம். அதன்படி டி20 கிரிக்கெட்டில் ரோகித்துடன் கே.எல் ராகுல் துவக்க வீரராக முதன்மை தேர்வாக இருக்கிறார். தற்போது அவர் இந்த தொடர்களை தவறவிட்டாலும் நிச்சயம் உலககோப்பை டி20 அணியில் ரோஹித்துடன் ராகுலே களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவோட உ.கோ அணியில் கண்டிப்பா அவருக்கு இடமிருக்கு – பிரக்யான் ஓஜா வெளிப்படை

இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் ராகுலுக்கு பதிலாக அவரது இடத்திற்கு மாற்று வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருமே தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளதால் அவர்களில் ஒருவர் டி20 தொடருக்கான அணியில் இடம்பிடிப்பார்கள் என்பது உறுதி.

Advertisement