இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆனது கடந்த சில தினங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 3-வது ஆட்டத்தில் தோல்வி அடைந்திருந்தாலும் ஒருநாள் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆனது இன்று துவங்க உள்ளது.
இந்த அணியில் இளம் வீரர்கள் அதிகம் இருப்பதால் நிச்சயம் இந்திய அணியின் கையே ஓங்கி இருக்கும் இவ்வேளையில் இங்கிலாந்து நாட்டில் உள்ள முதன்மை அணியில் சுப்மன் கில், ஆவேஷ் கான், வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூன்று வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு அணியில் இருந்து விலகி உள்ளனர்.
இதன் காரணமாக தற்போது இலங்கை சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய அணியில் இருக்கும் மூன்று வீரர்கள் அவர்களுக்கு மாற்று வீரர்களாக இங்கிலாந்து பறக்க உள்ளனர். இதன்காரணமாக அவர் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகுவார்கள் என்று தெரிகிறது. அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களான ப்ரித்வி ஷா, படிக்கல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தற்போது இங்கிலாந்திற்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களது விலகல் இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிரடியான தொடக்கத்தை தரும் ப்ரித்வி ஷா டி20 தொடரில் முக்கிய வீரராகக் கருதப்பட்டார். அவர் விலகுவதன் காரணமாக தற்போது தவானுடன் புதிய துவக்க வீரர் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அணியின் ஸ்கோரை எந்த நேரத்திலும் உயர்த்தி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்து செல்ல உள்ளதால் மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு பலத்த பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.
இதன் காரணமாக இன்றைய அணி தேர்வில் நிச்சயம் தவானுக்கு சில பிரச்சினைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. எது எப்படி இருப்பினும் இந்த டி20 கோப்பையை வெல்லும் அளவிற்கு பலமாகவே உள்ளது. அதே வேளையில் நிச்சயம் ப்ரித்வி ஷா, படிக்கல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரும் தற்போது இங்கிலாந்து பறப்பது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.