12 ஆண்டுகள் கழித்து இந்திய அணியில் ஏற்பட்ட மோசமான செயல் – விமர்சிக்கும் கிரிக்கெட் நிபுணர்கள்

Runout

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான தொடரை தீர்மானிக்கும் முக்கியமான மூன்றாவது போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியுள்ளது என்றே கூறலாம்.

Siraj 1

இந்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் போது இந்திய பேட்ஸ்மேன்கள் 3 பேர் ரன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். போட்டி நல்ல நிலையில் சென்று கொண்டிருந்தபோது ஹனுமா விஹாரி, அஸ்வின் மற்றும் பும்ரா என மூவர் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதுமட்டுமில்லாது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த ரஹானே மற்றும் முதலாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்க வேண்டிய கோலி என பல வீரர்கள் இத்தொடரில் ரன்அவுட் மூலம் வெளியேறியுள்ளனர்.

இந்திய அணி வீரர்கள் ரன் அவுட் அனைத்தும் இந்திய அணிக்கு சில மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதேபோன்று கிட்டத்தட்ட பனிரெண்டு ஆண்டுகள் கழித்து ஒரே டெஸ்ட் போட்டியில் மூன்று வீரர்கள் ரன் அவுட் ஆகியுள்ளனர். கடந்த முறை 2008ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக மொஹாலியில் நடைபெற்ற போட்டியின்போது சேவாக், யுவராஜ், லக்ஷ்மன் ஆகியோர் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

runout 1

அதற்கு பிறகு தற்போதுதான் 3 வீரர்கள் ரன் அவுட் ஆகி வெளியேறியுள்ளனர். இதே போன்ற நிகழ்வு ஏற்படும் போது இந்திய அணி வெற்றி பெற்றது கிடையாது. இதனால் இதுபோன்ற ரன் அவுட்களை தவிர்க்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் இந்திய அணியை குறை பாடி வருகின்றனர்.

- Advertisement -

runout 2

மேலும் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிங்கிள்ஸ் ஓடுவது அவசியம் தான். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் எடுத்து ஆக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. எனவே ரன் அவுட் என்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் செய்யும் தவறு தான், அதை மன்னிக்கவும் முடியாது இதில் எந்தவித கட்டாயமும் இல்லை என்று கடுமையாக இந்திய வீரர்களை நிபுணர்கள் விமர்சித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.