19 வயத்துக்குட்பட்டவர்கள் அணியில் சாதித்து அதன்பிறகு கிரிக்கெட் வாழ்க்கையை தொலைத்த 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

u19
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் தொடர்கள் ஆரம்பிப்பதற்கு முன்பு வரை இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்கு சிறந்த வீரர்களை அடையாளப்படுத்திக் கொடுப்பதில், பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடர் மிக முக்கிய பங்கு வகித்து வந்தது. முஹம்முது கைஃப், யுவாராஜ் சிங், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா போன்ற இந்திய வீரர்கள் அத்தொடரில் சிறப்பாக விளையாடிய காரணத்தினால் தான் இந்திய அணியில் இடம்பிடித்தார்கள். ஐபிஎல் தொடர் ஆரம்பித்த பிறகும், பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் ஜொலித்த இந்திய வீரர்களான ப்ரித்வி ஷா, சுப்மன் கில் போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடரிலும் பங்கேற்று, அதில் சிறப்பாக விளையாடி இந்திய அணியிலும் இடம்பிடித்து வருகின்றனர். ஆனால் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய போதிலும், இந்திய அணிக்கு தேர்வாகாத மூன்று முக்கிய வீரர்களை கீழே நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

Tanmay-Srivastava

- Advertisement -

தன்மே ஸ்ரீவஸ்டாவா:

2008ஆம் ஆண்டு நடைபெற்ற யு19 உலக கோப்பை தொடரில், இந்திய அணியின் மிக முக்கிய பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் தான் ஸ்ரீவஸ்டாவா. மேலும் அத்தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இவர்தான் முதலிடம் பிடித்தார். இவருடைய அற்புதமான பேட்டிங் திறமையின் காரணமாக 2008 மற்றும் 2009 ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப் அணிக்காக விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இவரால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட முடியாமல் போனதால், இவர் இந்திய தேசிய அணிக்கும் தேர்வு செய்யப்படவில்லை. இவருடன் யு19 உலக கோப்பை தொடரில் விளையாடிய விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இன்று இந்திய அணியின் மிக முக்கிய வீரர்களாக இருக்கின்றனர். 7 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்ரீவஸ்டாவா, அடித்த மொத்த ரன்களின் எண்ணிக்கை 8 மட்டுமே.

unmukt

உன்முக் சாந்த்:

- Advertisement -

இந்திய யு19 கிரிக்கெட் அணியை 2012ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் வழிநடத்தி சென்ற உன்முக் சாந்த், அத்தொடரின் இறுதிப் போட்டியில் சதமடித்து இந்தியாவிற்கு உலக கோப்பையையும் கைப்பற்றி கொடுத்தார். அதனையடுத்து 2013ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக ஐபிஎல் தொடரில் களமிறங்கிய இவர், அந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 61 ரன்களை மட்டுமே அடித்தார். அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடி இரண்டு ரன்கள் எடுத்த அவரை 2015 ஆம் ஆண்டு ஏலத்தில் எடுத்தது மும்பை அணி. அந்த அணிக்காக 6 போட்டிகளில் விளையாடிய சாந்த், 102 ரன்கள் மடடுமே எடுத்ததால் மும்பை அணியாலும் கைவிடப்பட்டார். அதன் பிறகு எந்த அணியும் இவரை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. விராட் கோலியைப் போன்று யு19 உலக கோப்பையை இந்தியாவிற்கு பெற்றுத் தந்த உன்முக் சாந்த் தற்போது தனது கிரிக்கெட் வாழ்க்கைக்காக அமெரிக்காவில் குடியேறி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

yo mahesh

விஜய்குமார் யோ மஹேஷ்:

2006ஆம் ஆண்டு நடைபெற்ற யு19 உலக கோப்பையில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றி அச்தினார் தமிழக வீரரான யோ மஹேஷ். அதே அசத்தலான திறமையை 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போதும் டெல்லி அணிக்காக வெளிப்படுத்திய இவர், அத்தொடரில் 16 விக்கெட்டுகளை கைப்பற்றி கெத்து காட்டினார். இவருடைய இந்த திறமையை பார்த்த அனைவரும் நிச்சயமக இவர் இந்திய அணியில் ஒரு வேகப் பந்து வீச்சாளராக இடம்பிடிப்பார் என்று கூறினர். ஆனால் அதற்கடுத்து நடைபெற்ற 2009 மற்றும் 2010 ஐபிஎல் தொடர்களில் சேர்த்து இவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்ட போட்டிகளின் எண்ணிக்கை வெறும் இரண்டு மட்டுமே. கடைசியாக 2012ஆம் ஆண்டு சென்னை அணியில் இடம்பிடித்த இவர், 5 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். இந்திய அணியில் வேகப் பந்து வீச்சாளராக இடம்பிடிப்பார் என்று எதிர் பார்த்த யோ மஹேஷ், அதை நிறைவேற்றாமல் கடந்த ஆண்டு தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

Advertisement