ஒரே ஒருநாள் போட்டியில் 50 ரன்கள் அடித்தது மட்டுமின்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 3 இந்திய வீரர்கள் – லிஸ்ட் இதோ

Ganguly
- Advertisement -

கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்கள் தனது திறமையை பேட்டிங்கில் வெளிப்படுத்துவர். அதேபோல் பந்து வீச்சாளர்கள் தனது திறமையை பந்து வீச்சில் வெளிக்கொண்டு வருவர். ஆனால் ஆல்ரவுண்டர்கள் பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்திலும் தங்களது திறமையை வெளிக்கொண்டு வருவார்கள். ஒரு அணியில் பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்கள் என இருவரைத் தேர்வு செய்வதற்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஒருவரை தேர்வு செய்தால் இவர்களின் பணியை ஒருவரே செய்து விடுவார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஏராளமான ஆல்ரவுண்டர்கள் தங்களது முத்திரையைப் பதித்து உள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இந்தியாவின் மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்தார். தற்போதைய இந்திய அணியில் ஹர்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா தனது ஆல்ரவுண்டர் பணியை சிறப்பாக செய்து வருகிறார். தற்போது அப்படி பேட்டிங்கிலும் பந்துவீச்சில் ஒரே போட்டியில் அரைசதம் அடித்து 5 விக்கெட்களை வீழ்த்திய 3 இந்திய வீரர்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

SRIKKANTH

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் (70, 5/27) :

ஸ்ரீகாந்த், இவர் இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர். இந்திய அணிக்காக 146 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4092 குவித்துள்ளார். தனது ஆக்ரோஷமான பேட்டிங்கில் அறியப்பட்ட ஸ்ரீகாந்த் ஒருநாள் தொடரில் அரைசதம் அடித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 1988ல்நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்ரீகாந்த் 7 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 27 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து பேட்டிங்கில் 87 பந்துகளை எதிர்கொண்டு 70 ரன்களை குவித்து இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

- Advertisement -

Ganguly 1

சவுரவ் கங்குலி: (71, 5/34) :

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த கேப்டன்களில் ஒருவராக சௌரவ் கங்குலி திகழ்கிறார். அவரது தலைமையில், ஐசிசி 2003 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியை இந்தியா அணி எட்டியது. 2000ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் சவுரவ் கங்குலி 10 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 34 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து பேட்டிங்கில் 68 பந்துகளை எதிர்கொண்டு 71 ரன்களை குவித்தார். இதில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

YuvrajSingh

யுவராஜ் சிங்: (50 , 5/31) :

இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் 304 ஒரு நாள் தொடரில் விளையாடி 8071 ரன்களை குவித்துள்ளார். 2011 உலக கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிரான 22வது போட்டியில் யுவராஜ் சிங் தனது ஆல்ரவுண்டர் திறமையை நிரூபித்தார். யுவராஜ் சிங்கின் சிறப்பான பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 31ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்திருந்தார். அந்த போட்டியில் அயர்லாந்து அணி 187 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 100 ரன்கள் அடித்து 4 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது. அப்போது யுவராஜ் சிங் நிதானமாக விளையாடி 75 பந்துகளை எதிர்கொண்டு 50 ரன்களை குவித்தார். இதன் மூலம் இந்திய அணி 46 ஆவது ஓவரிலேயே தங்களது வெற்றியை 5 விக்கெட் வித்தியாசத்தில் பதிவு செய்தது.

Advertisement