பேர்வெல் மேட்ச் நடைபெறாமல் ஓய்வை அறிவித்த 3 இந்திய ஜாம்பவான் வீரர்கள் – லிஸ்ட் இதோ

Yuvraj
- Advertisement -

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு என்றால், அதை ஒரு மதமென்றே குறிப்பிடலாம். அந்த அளவிற்கு கிரிக்கெட்டானது இந்திய மக்களின் மனதில் ஊறிப்போயிருக்கிறது. அத்தகைய இந்திய கிரிக்கெட் அணிக்கு பல்வேறு காலகட்டங்களில் பல திறமையான கிரிக்கெட் வீரர்கள் கிடைத்துள்ளனர். அவர்கள் தங்களது இளம் வயதில் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், வயது சென்ற பின் இந்திய அணிக்கு சிறப்பாக செயல்பட முடியாமல் போனதால், இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டுள்ளனர். அதில் பல திறமையான வீரர்கள் தங்களது சர்வதேச கிரிக்கெட் ஓய்வை அறிவிப்பதற்கு முன், இந்திய அணிக்கு கடைசியாக ஒரு போட்டியில் விளையாடகூட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதே கசப்பான உண்மையாகும். அப்படி இந்திய அணிக்காக பல சாதனைகள் படைத்து ஓய்வு பெறுவதற்கு முன், ஒரு போட்டியில்கூட இந்திய அணிக்காக விளையாடாத மிக முக்கியமான மூன்று இந்திய வீரர்களை கீழே நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

yuvi

- Advertisement -

யுவராஜ் சிங்:

மகேந்திர சிங் தோணி தலைமையிலான இந்திய அணி, 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை மற்றும் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது. அந்த இரண்டு உலக கோப்பைகளிலும் இந்திய அணியின் நாயகனாக திகழ்ந்தவர் தான் யுவராஜ் சிங். ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமில்லாமல் ஒரு ஸ்பின்னராகவும் இந்த இரண்டு உலக கோப்பைகளிலும் ஜொலித்த அவர், இந்த இரண்டு தொடர்களிலும், தொடர் நாயகன் விருது வாங்கி அசத்தினார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் பாதியில் அவருக்கு கேன்சர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர் முழுவதும் சிறப்பான பங்களிப்பை அளித்து, உலக கோப்பையை இந்தியாவிற்கு பெற்றுத் தந்த அவருக்கு, 2017ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரு போட்டியில்கூட இந்திய அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இறுதியாக அவரே 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது ஓய்வறிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhoni

மகேந்திரசிங் தோணி:

- Advertisement -

ஐசிசி நடத்தியிருக்கும் அனைத்து தொடர்களிலும் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான மகேந்திர சிங் தோணி, தனது ஓய்வு முடிவை கடந்த வருடம், ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். இந்தியாவிற்காக டி20 மற்றும் ஒரு நாள் உலக கோப்பைகள் மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி ஆகிய கோப்பைகளை வென்று தந்த ஒரு கேப்டன், இப்படி தனது ஓய்வு முடிவை இன்ஸ்டாகிராமில் அறிவித்திருக்கிறார் என்பதைக் கண்டு உலக கிரிக்கெட் ரசிகர்களே அதிர்ச்சிக்கு ஆளானார்கள். அவர் ஓய்வு முடிவை அறிவித்த பிறகும், கண்டிப்பாக தோணிக்கு ஒரு ஃபேர்வல் போட்டியை ராஞ்சி மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்வோம் என்று கூறியிருக்கிறது, அவரது சொந்த மாநில அரசாங்கம்.

Raina-5

சுரேஷ் ரெய்னா:

மகேந்திர சிங் தோணியின் உற்ற நண்பனாக எப்போதுமே விளங்கி வரும் ரெய்னாவும், தோணியைப் போலவே தனது ஓய்வை இன்ஸ்டாகிராமில் தான் அறிவித்தார். அதுவும் தோணி தனது ஓய்வை அறிவித்த அதே ஆகஸ்ட் 15ஆம் தேதியே தனது ஓய்வையும் அறிவித்து ஆச்சரியப்படுத்தினார் ரெய்னா. இந்திய அணிக்காக ஒன்றாக விளையாடிய இருவரும், ஐபிஎல் தொடர்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சரேஷ் ரெய்னா இந்திய அணிக்காக கடைசியாக 2108ஆம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடினார். அதற்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடிக்க அவர் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் தராமல் போகவே இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு தற்போது சென்னை அணிக்காக ஐபிஎல்லில் விளையாடி வருகிறார்.

Advertisement