IND vs AUS : சொந்த மண்ணில் நடக்கும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் இந்தியாவுக்கு காத்திருக்கும் 3 சவால்கள்

INDvsAUS
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக சமீபத்திய ஆசிய கோப்பையில் களமிறங்கிய ரோஹித் சர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெறாமல் பரிதாபமாக வெளியேறியது. இத்தனைக்கும் நம்பர் ஒன் டி20 அணியாக இருந்தும் தவறான அணி தேர்வு, சுமாரான கேப்டன்ஷிப் போன்ற அம்சங்களால் தோல்விகளை சந்தித்து இங்கேயே கோப்பையை தக்க வைக்க முடியாமல் வெளியேறிய இந்தியா ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையை எங்கே வெல்லப்போகிறது என்பதே இந்திய ரசிகர்களின் தற்போதைய கவலையாக இருக்கிறது.

indvsaus

- Advertisement -

இருப்பினும் மனம் தளராமல் தோல்வியை வெற்றியின் முதல் படியாக மாற்றுவதற்காக தயாராகும் இந்தியா அடுத்ததாக சொந்த மண்ணில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் எதிர்கொள்கிறது. இந்தத் தொடரில் இந்தியாவுக்காக காத்திருக்கும் 3 சவால்களை பற்றி பார்ப்போம்:

3. எதிரணியின் பலம்: முதலில் எதிரணி எதுவாக இருந்தாலும் சொந்த மண்ணில் இந்தியா வலுவான அணி என்பதில் சந்தேகமில்லை. அதனால் நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படும் இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க், ஸ்டோனிஸ், மிட்சேல் மார்ஷ் என 4 துருப்பு சீட்டு வீரர்கள் காயம் மற்றும் ஓய்வு காரணமாக இடம் பெறவில்லை. அதனால் இந்தியா வெல்வதற்கான வாய்ப்பு மேலும் அதிகமாக காணப்படுகிறது.

australia

ஆனால் சமீபத்திய ஆசிய கோப்பையில் செய்த தவறுகளை திருத்துவதற்கு ஒரு வாய்ப்பாக பார்க்கப்படும் இந்த தொடரில் மேற்குறிப்பிட்ட முக்கிய வீரர்கள் இல்லாததால் 100% பலமான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தங்களது 100% சோதனைகளையும் வெற்றிகளையும் பார்க்க முடியாத நிலைமை இந்தியாவுக்கு ஏற்படுள்ளது. அவர்களுக்கு பதில் டிம் டேவிட் போன்ற வீரர்களுடன் ஆஸ்திரேலியா பலமான அணியாக இருந்தாலும் இந்த தொடரில் விளையாடும் அணியில் பாதி பேர் மாட்டுமே உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவார்கள்.

- Advertisement -

2. பேட்டிங் வரிசை: உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியா இன்னும் 6 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ள நிலையில் இன்னும் பேட்டிங் வரிசையை உறுதி செய்யாத அவல நிலவுகிறது. குறிப்பாக பார்மின்றி தவிர்ப்பதுடன் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடும் ராகுலுக்கு பதில் பார்முக்கு திரும்பிய விராட் கோலியை தொடக்க வீரராக களமிறக்கலாமா? அல்லது பின்னடைவு ஏற்பட்டாலும் பரவாயில்லை ராகுல் தொடரலாமா?

RIshabh Pant Dinesh Karthik

அதைவிட ஒரே இடதுகை பேட்ஸ்மேன் என்பதற்காக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்யலாமா அல்லது ஆசிய கோப்பையில் கழற்றி விட்டதால் தோல்வி கிடைத்ததை மனதில் வைத்து தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பளிக்கலாமா? போன்ற கேள்விகள் பேட்டிங் வரிசையில் நிலவுகிறது. அத்துடன் ஜடேஜாவுக்கு பதில் லோயர் ஆர்டரில் அக்சர் படேல் அல்லது தீபக் ஹூடா ஆகியோரில் யாரை பயன்படுத்துவது என்ற குழப்பமும் நிலவுகிறது.

- Advertisement -

எனவே இவை அனைத்திற்கும் இந்த ஆஸ்திரேலிய தொடரில் தீர்வு காண்பதற்கு அணி நிர்வாகம் முயற்சிக்க உள்ளது. அதிலும் டிராவிட் – ரோஹித் போன்றவர்கள் அந்த அத்தனை சோதனைகளையும் இந்த ஒரே தொடரில் நிகழ்த்தி பார்க்க கொஞ்சமும் தயங்க மாட்டார்கள் என்பதால் இங்கேயே அந்த சவால்களில் தீர்வு காண்பார்களா அல்லது அடுத்ததாக நடைபெறும் தென் ஆப்பிரிக்க தொடர் வரை அதை எடுத்துச் செல்வார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Bhuvneshwar Kumar

3. டெத் பவுலிங்: ஆசிய கோப்பையில் இந்தியா தோல்வியடைவதற்கு கடைசி கட்ட ஓவர்களில் புவனேஸ்வர் குமார் ரன்களை வாரி வழங்கியது முக்கிய காரணமாக அமைந்தது. அந்த நிலைமையில் அவரைவிட சிறப்பாக செயல்பட்ட அரஷ்தீப் சிங்கிற்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஆசிய கோப்பையில் காயத்தால் விலகிய ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் இந்த தொடரில் விளையாடுகின்றனர்.

ஆனால் ஏற்கனவே நல்ல பார்மில் இருந்த கேஎல் ராகுல் காயத்தை சந்தித்து அணிக்கு திரும்பியதும் பழைய பார்மில் விளையாட முடியாததைப் போல் சுமார் ஒரு மாதத்திற்கு மேல் காயத்தால் அணியிலிருந்து விலகி மீண்டும் திரும்பியுள்ள இவர்கள் இந்த தொடரில் தடுமாறுவதற்கு வாய்ப்புள்ளது. அதிலும் ஹர்ஷல் படேல் சாதாரண நாட்களிலேயே அவ்வப்போது தடுமாறக் கூடியவர்.

Jasprit Bumrah

மறுபுறம் பும்ரா உலகத்தரமானவர் என்பதால் காயத்திலிருந்து திரும்பியதும் இந்த தொடரில் கடைசிகட்ட ஓவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அவரது தலையில் விழுகிறது. ஏனெனில் புவனேஷ்வரை நம்ப முடியாது. அத்துடன் சுமார் ஒரு வருடம் கழித்து இந்த தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ள முகமது ஷமி பும்ரா, புவனேஷ்வர், ஹர்ஷல் படேல் ஆகியோரைத் தாண்டி விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெற்று அசத்துவாரா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement