- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2வது டெஸ்டில்.. சிராஜ், ராகுலை நீக்கிய ரோஹித் சர்மா.. தமிழக வீரர் சுந்தருடன் இந்திய பிளேயிங் லெவன்

நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 46க்கு ஆல் அவுட்டான இந்தியா கடுமையாகப் போராடியும் தோல்வியை சந்தித்தது. அதனால் 36 வருடங்களுக்குப் பின் நியூசிலாந்திடம் ஒரு தோல்வியை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே தொடரில் பின்தங்கியது.

இந்த நிலையில் இத்தொடரின் இரண்டாவது போட்டி அக்டோபர் 24ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்படுவதாக கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார்.

- Advertisement -

3 மாற்றங்கள்:

குறிப்பாக கடந்த போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சுமாராக விளையாடி இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தனர். அதனால் அவர்களை நீக்க வேண்டும் என்று சில முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கோரிக்கை வைத்தனர். அதை அப்படியே கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டியில் செய்துள்ளார்.

அவர்களுக்கு பதிலாக கடந்த போட்டியில் கழுத்து வலியால் சந்தித்த காயத்தால் விளையாடாத சுப்மன் கில் இந்த போட்டியில் விளையாடுவதாக ரோகித் அறிவித்தார். சிராஜ்க்கு பதிலாக கடந்த வங்கதேச டெஸ்ட் தொடரில் அசத்திய ஆகாஷ் தீப் விளையாட உள்ளதாகவும் ரோகித் தெரிவித்தார். அதே போல அணியில் புதிதாக சேர்க்கப்பட்ட தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 3வது ஸ்பின்னராக குல்தீப் யாதவுக்கு பதிலாக விளையாடுவதாகவும் அவர் கூறினார்.

- Advertisement -

இந்திய அணி:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்களும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்புகிறோம். இது போன்ற டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது எப்படி இருந்தாலும் முதல் மணி நேரம் சவாலாக இருக்கும். கடந்த போட்டியில் நாங்கள் தோற்றாலும் இரண்டாவது இன்னிங்ஸில் நன்றாக விளையாடினோம். நாங்கள் இங்கே விஷயங்களை மாற்றுவோம்”

இதையும் படிங்க: நியூசிலாந்து அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட வாய்ப்புள்ள 2 மாற்றங்கள் – உத்தேச பிளேயிங் லெவன்

“இது போன்ற தொடரில் பின்தங்கியிருக்கும் போது இதையே செய்ய வேண்டும். ஆம் பிட்ச் கொஞ்சம் காய்ந்திருக்கிறது. முதல் 10 ஓவர்களில் நாங்கள் நன்றாக செயல்படுவது அவசியம். அணியில் 3 மாற்றங்கள்” என்று கூறினார். இந்திய அணி: யசஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், ஜஸ்ப்ரித் பும்ரா

- Advertisement -