- Advertisement -
ஐ.பி.எல்

டி20 உலககோப்பை இந்திய அணியின் வீரர்கள் ஒருவர் கூட ஐ.பி.எல் பைனலில் இல்லை – ஆனா நம்ம பசங்க கலக்கிட்டாங்க

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் துவங்கிய நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியுடன் நிறைவடைய உள்ளது. இந்த தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் விளையாட பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் செய்ய தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் தகுதி பெற்றுள்ளன.

அந்த வகையில் இன்று மே 26-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த தொடருக்கான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடப்போகும் இந்திய அணியில் இருந்து ஒருவர் கூட விளையாடவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ரோகித் சர்மா தலைமையில் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 15 வீரர்கள் அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் அந்த வீரர்களில் ஒருவர் கூட இந்த இறுதி போட்டியில் விளையாடவில்லை.

ரோகித் சர்மா, ஹார்டிக் பாண்டியா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ் என பல முன்னணி வீரர்கள் இருந்தும் அவர்களில் ஒருவர் கூட இந்த தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடவில்லை.

- Advertisement -

ஆனால் இந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் இரண்டு தமிழக வீரர்கள் விளையாட இருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் கொல்கத்தா அணிக்காக வருண் சக்கரவர்த்தியும், ஹைதராபாத் அணிக்காக நடராஜன் ஆகியோரும் இறுதிப்போட்டியில் விளையாடுகின்றனர். ஆனால் இவர்கள் இருவருமே இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சேமிச்சு வெச்சிருக்கோம்.. ஐபிஎல் 2024 ஃபைனலுக்கு முன் மெரினாவில் சவால் விட்டுக்கொண்ட ஸ்ரேயாஸ் – கமின்ஸ்

அதிலும் குறிப்பாக இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் நடராஜன் முக்கிய வெற்றிகளில் பங்காற்றி இருப்பதால் அவரை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் ரசிகர்கள் மத்தியில் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -