- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலியின் இடத்தில் ஒருநாள் போட்டியில் விளையாடப்போவது யார்? – 2 பேருக்கு இடையே போட்டி

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜூன் 13-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இந்த தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தற்போது தயாராகி வருகின்றனர்.

விராட் கோலியின் இடத்தை நிரப்பப்போகும் 2 வீரர்கள் :

இந்த ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த நட்சத்திர டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான விராட் கோலி காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக இளம் துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

அதே வேளையில் தற்போது விராட் கோலியின் இடத்தில் விளையாடப்போகும் வீரர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் துவக்க வீரரான ஜெயஸ்வால் மூன்றாவது இடத்தில் விளையாடுவது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இதுவரை இந்திய அணிக்காக 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

அதனால் அவர் மூன்றாவது இடத்தில் விளையாட வாய்ப்புள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. அதேவேளையில் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை தாண்டி இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான இஷான் கிஷன் மூன்றாவது இடத்திற்கு தேர்வு செய்யப்பட அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஐ.பி.எல் மட்டும் ஆடமுடியுது.. இந்தியாவுக்காக விளையாட கசக்குதா? ஜஸ்ப்ரீத் பும்ரா குறித்து – சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்

ஏனெனில் ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்துள்ள அவர் சமீப காலமாக டி20 போட்டிகளில் மூன்றாம் இடத்தில் களமிறங்கி அற்புதமாக செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக ஜெய்ஸ்வால் அல்லது இஷான் கிஷன் ஆகிய இருவரில் ஒருவர் விராட் கோலி இடத்தில் விளையாடுவார்கள் என்பது உறுதி.

- Advertisement -