அறிமுகமாகும் வாய்ப்பு பெறவில்லை என்றாலும் அணியில் இடம்பிடித்த 2 வீரர்கள் – விவரம் இதோ

IND
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று (1-1) ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து எஞ்சியுள்ள 3 போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ள வேளையில் காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் வெளியேறியுள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணியில் சர்ப்ராஸ் கான் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரேல் ஆகியோர் தொடர்ந்து நீடிப்பதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. ஏற்கனவே விராட் கோலிக்கு பதிலாக இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ரஜத் பட்டிதார் அறிமுகமாகியிருந்தார்.

இவ்வேளையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக நிச்சயம் சர்பராஸ் கானுக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே போன்று ஒரு சில வீரர்களின் காயம் காரணமாக துருவ் ஜுரேல் மற்றும் சர்பராஸ் கான் ஆகிய இரண்டு வீரர்களும் இந்திய அணியுடன் தொடர்ச்சியாக பயணிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணிக்காக தேர்வாக பல இளம் வீரர்கள் வரிசை கட்டி காத்திருக்கும் வேளையில் சில வீரர்களை மட்டும் நம்பும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தொடர்ச்சியாக அவருக்கு ஆதரவுகளை வழங்கி வருகிறது.

இதையும் படிங்க : கியர் கார் மாதிரி இப்படி ஒரு பிளேயரா.. ஐபிஎல் தொடரில் அதை மட்டும் செய்ங்க.. இர்பான் பதான் அறிவுரை

உள்ளூர் கிரிக்கெட்டில் சர்பராஸ் கானும், ஐ.பி.எல் தொடரில் துருவ் ஜுரேலும் அசத்திய வேளையில் இவர்கள் இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement