காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயரின் இடத்திற்கு போட்டியிடும் 2 வீரர்கள் – வாய்ப்பு யாருக்கு ?

Iyer

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னர் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Iyer-1

அதிலும் குறிப்பாக முதலாவது ஒருநாள் போட்டியின்போது பீல்டிங் செய்கையில் ஏற்பட்ட தோள்பட்டை காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் அதிகாரபூர்வமாக வெளியேற்றப்பட்டு உள்ளதால் அவருக்கான இடத்தில் யார் விளையாட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஐயரின் நான்காவது இடத்தில் விளையாட இரண்டு வீரர்கள் தற்போது போட்டியில் உள்ளனர். அவர்களில் ஒருவர் சூர்யகுமார் யாதவ் அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமான செய்ய முதல் போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இரண்டாவது போட்டியின்போது அறிமுக வீரராக முதல்முறையாக விளையாடி அரை சதம் அடித்து அசத்தினார்.

sky 1

மேலும் இறுதி டி20 போட்டியில் வேகமாக 30 ரன்களை குவித்த அவர் இந்த ஒருநாள் தொடரில் மிடில் ஆர்டரை பலப்படுத்தும் விதமாக ஐயரின் இடத்தில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. அதே போன்று மற்றொரு வீரராக சமீபகாலமாகவே டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் டி20 என தனது பேட்டிங் ஃபார்மை அசத்தலாக வைத்திருக்கும் விக்கெட் கீப்பிங் ரிஷப் பண்ட் அவரது இடத்தில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

pant 1

இருப்பினும் இவர்கள் இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது போட்டியின் அன்றுதான் தெரியும். ஆனால் ஒருவேளை ராகுல் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக துவக்க வீரராக களம் இறங்கினால் மிடில் ஆர்டரில் இவர்கள் இருவருக்குமே அதாவது நான்காவது இடத்தில் சூர்யகுமார் யாதவ்க்கும், ஐந்தாவது இடத்தில் ரிஷப் பண்ட் இருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.