இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியில் 2 பிளேயருக்கு கொரோனா உறுதி – வெளியான ஷாக்கிங் தகவல்

IND
- Advertisement -

இந்திய அணி கடந்த ஜூன் மாதம் துவக்கத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கலந்துகொண்டது. அதனைத் தொடர்ந்து தற்போது வரும் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் முடிவடையும் 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

IND

- Advertisement -

இதன்காரணமாக முழு இந்திய அணியும் தற்போது இங்கிலாந்திலேயே தங்கியுள்ளது. இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக வீரர்களுக்கு ஒரு மாதகாலம் ஓய்வு உள்ள நிலையில் பயோ பபுளில் இருந்து வெளியே சென்று வரலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் தங்கள் குடும்பத்தினருடன் தங்கி இருக்கின்றனர்.

இவ்வேளையில் இந்திய அணியில் உள்ள இரண்டு வீரர்களுக்கு கொரனோ உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த இரண்டு வீரர்கள் யார் ? என்பது குறித்த எந்த ஒரு தகவலையும் அணி நிர்வாகம் வெளியிடவில்லை.

southampton

இருப்பினும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு வீரர்களும் நலமுடன் இருப்பதாகவும், அவர்களுக்கு இலேசான அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா உறுதியானவை தொடர்ந்து அவர்கள் இருவரையும் பத்து நாட்கள் தனிமைப்படுத்தியது அணி நிர்வாகம். தற்போது அந்த 2 வீரர்களில் ஒருவருக்கு கொரோனா நெகட்டிவ் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

shami 2

மேலும் தொற்று உறுதி செய்யப்பட்ட மற்றொரு வீரரின் தனிமைப்படுத்துதலை ஜூலை 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் மீண்டும் நெகட்டிவ் வந்தவுடன் அவர் அணியில் இணைவார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த இரண்டு வீரர்கள் யார் ? என்ற எந்த ஒரு தகவலையும் இதுவரை அணி நிர்வாகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement