- Advertisement -
ஐ.பி.எல்

சி.எஸ்.கே அணியின் இந்த 2 வீரர்களுக்கு இந்திய அணியில் நிச்சயம் வாய்ப்பு இருக்காம் – தீப்தாஸ் குப்தா தகவல்

ஐபிஎல் தொடரின் மூலமாக இளம் வீரர்கள் தங்களது திறனை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பெறுவது என்பது இக்காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகி உள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே தேசிய அணியில் இடம் கிடைக்கும் என்ற நிலையில் இருந்து தற்போது இளம் வீரர்கள் ஒரு ஐபிஎல் சீசனில் தங்களது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணியில் இடம் பிடித்து விடுகிறார்கள்.

அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளில் பல இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் ஐபிஎல் தொடரின் மூலமாக வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி புதிய வாய்ப்புகளை பெறும் வீரர்களாக இந்த ஐபிஎல் தொடரில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், ராகுல் திரிப்பாதி போன்ற வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் அவர்களுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

அந்தவகையில் சிஎஸ்கே அணியில் பிரமாதமான செயல்பாட்டினை வெளிப்படுத்தி வரும் இரண்டு வீரர்களுக்கு நிச்சயம் இந்திய அணியில் விரைவில் இடம் கிடைக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான தீப் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார். அவர் கூறிய அந்த இரண்டு வீரர்கள் யாரெனில் : சிஎஸ்கே அணி இந்த ஆண்டு பந்துவீச்சில் மிகவும் பலவீனமாக காணப்படுகிறது. ஆனாலும் இளம் வீரர்களான முகேஷ் சவுத்ரி மற்றும் சிமர்ஜித் சிங் ஆகிய இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவர்கள் இருவருக்கும் அனுபவம் குறைவு என்றாலும் தற்போது நல்ல முன்னேற்றத்தை பெற்றுள்ளனர். அதுவும் இவர்கள் இருவர் குறித்து பேசுகையில் : இளம் வீரர்கள் தங்களுக்கு தேவையான போட்டிகள் கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் அவர்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னேற்றம் அடைவார்கள் என்றும் இனிவரும் சீசன்களில் இந்த இருவரும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இவர்கள் இருவரையும் ஆதரித்துப் பேசிய தீப் தாஸ் குப்தா கூறுகையில் : சிஎஸ்கே எப்போதுமே தரமான இளம் வீரர்களை உருவாக்கி அவர்களுக்கு நல்ல முறையில் வழிகாட்டி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் முகேஷ் சவுத்ரி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரிடமும் தோனி ஏதோ ஒரு சிறப்பை கண்டிருக்கிறார். அதன் காரணமாகவே அவர்கள் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரில் தொடர் சொதப்பல். விராட் கோலிக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா? – கங்குலி பதில்

இதன் மூலம் நல்ல பலனை பெற்றுள்ள இவர்கள் இருவரும் இந்திய அணியில் விரைவில் இடம் பிடிக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். இந்த ஆண்டு இதுவரை நடைபெற்றுள்ள ஐபிஎல் தொடரில் பவர்பிளே ஓவர்களில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி முகேஷ் சவுத்ரி தனது பிரமாதமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by