
இந்திய கிரிக்கெட் அணியில் பல அனுபவமிக்க வீரர்களும், திறமைமிக்க வீரர்களும் இருந்து வருகின்றனர். மேலும் ,திறமைமிக்க கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியாவில் பஞ்சமே இல்லை என்று கூட மார் தட்டி கூறலாம். அதற்கு சான்றாக இந்தியாவில் பிறந்து பிற நாட்டு அணிகளில் விளையாடியுள்ள டாப் 10 கிரிக்கெட் வீரர்களை பற்றி இங்கே காணலாம்.
சிவ்நாராயின் சந்தர்பால்: மேற்கிந்திய அணியில் விளையாடிய இவர், கயானாவில் பிறந்தாலும் இவர் இந்தியாவில் இருந்து தான் மேற்கிந்திய தீவுக்கு இடம்பெயர்ந்துள்ளார். இதுவரை 164 டெஸ்ட் போட்டிகள் , 268 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
ஜீதான் படேல் :- நியூஸிலாந்து அணியில் ஆடும் ஒரே ஒரு இந்திய வம்சாவழியை சேர்ந்த வீரர். சிறு வயதாக இருக்கும் போதே நியூஸிலாந்து அணியில் விளையாட இவருக்கு வாய்ப்பு கிடைத்து விட்டது. இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
குரிண்டெர் சந்து:- ஆஸ்திரேலிய அணியின் இளம் வேகா பந்து வீச்சாளர். இந்தியாவை சேர்ந்த போதும் தனது முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக விளையாடினர். மேலும், 2015 ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் வெளிநாட்டு வீரராக விளையாடியுள்ளார்.
இஷ் சோதி :- இந்திய நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த இந்த இளம் வீரர், பின்னர் நியூஸிலாந்து அணி இவரை தத்தெடுத்துக் கொண்டது. சூழல் பந்து வீச்சாளரான இவர், இளம் வயதை இந்தியாவில் தான் கழித்துள்ளார். மேலும் இந்திய அணிக்காக இரண்டு முதல் ரக போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
ரவி போபாரா:- அனைவர்க்கும் பரிட்சியமான இங்கிலாந்து அணியில் விளையாடி வந்த ஒரு இந்திய வீரர். இங்கிலாந்து அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்த இவர், 120 போட்டிகளில் விளையாடி 2600 ரன்களை குவித்துள்ளார்.
மொண்ட்டி பணிசேர்;’- இந்திய சீக்கியர் வம்சாவழியை சேர்ந்த இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநலத்தில் பிறந்தவர். , இங்கிலாந்து அணியில் நீண்ட காலமாக விளையாடியுள்ளார் . இதுவரை இங்கிலாந்து அணிக்காக 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 167 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
சுனில் நரைன்:- மேற்கிந்திய அணியின் ஆல் ரவுண்டர், சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியவர். 1988 இல் ட்ரினிடா வில் பிறந்தார், இவருடைய தந்தை ஒரு இந்த வம்சாவழியை சேர்ந்தவர். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களிலும் விளையாடி வருகிறார்.
நாசர் ஹுசைன்:- இங்கிலாந்து அணியின் நேர்த்தியான ஆட்டகாரர்களில் ஒருவர், இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் இருந்த நாசர் ஹுசைன் 1968 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். தமிழக அணிக்காக ஒரு சில முதல் ரக கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
அசீம் ஆம்லா:-தென்னாபிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர், தென்னாபிரிக்காவில் உள்ள டர்பன் மாநிலத்தில் பிறந்தாலும், இவரது பூர்விகம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் தான். ஜூலை 2014 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 311* ரன்கள் எடுத்ததன் மூலம் அதிக ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.
ரோஹன் கன்ஹை :- மேற்கிந்திய அணியின் முன்னாள் ஆட்டக்காரர், 1960 களில் சிறந்த பேட்ஸ்மேன் என்று பெருமையை பெற்றவர். இந்தியாவில் பிறந்த இவர் பின்னர் காரேபியான் நாட்டிற்கு புலம்பெயர்ந்தார். இவரின் சிறப்பான ஆட்டத்தை கண்டு வியந்த இந்திய அணியின் முன்னாள் ஆட்டக்காரர் சுனில் கவாஸ்கர், தனது மகனுக்கு ரோஹன் என்று பெயரை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.