துணிவு இருந்தால் இதை செய்யுங்கள்..! அரசியல்வாதி குடும்ப பெண்களுக்கு சவால் விட்ட கவுதம் கம்பீர்..?

gambir

உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்திய மக்களை மிகவும் தலை குனிய வைக்க கூடிய இந்த செய்தியை அறிந்து பல்வேறு மக்களும் தங்களுது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் இது குறித்த தனது கோபத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
gautham gambir

சமீபத்தில் சி என் என் (CNN) – ல் வெளியிட்ட தகவலின்படி, லண்டனை தலைமையகமாக கொண்டுள்ள தாமஸ் ரியூட்டர்ஸ் தொண்டு நிறுவனம் ஒன்று 550 பெண் நிபுணர்களிடம் நடத்திய கணக்கெடுப்பில், இந்தியா உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலிலும், வேலைக்காக ஆட்களை கடத்துவது, கட்டாய பாலியல் உறவு, கட்டாய திருமணம் போன்ற பட்டியலிலும் முதல் இடத்தை இருப்பதாக அறிவித்திருந்தது.

இந்த செய்தியை அறிந்து பல்வேறு மக்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர், “என்று அரசியல் தலைவர்களின் மகளோ. மனைவியோ, அம்மாவோ எந்த வித பாதுகாப்புமின்றி வெளியில் செல்கின்றனரோ அப்போது இந்த பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கும். பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் இருப்பது மிகவும் கேவலமான ஒரு விடயம்’ என்று மிகவும் காட்டமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


ஏற்கனவே, பெண்களுக்கு எதிரான பாதுகாப்பு குறித்தும் பெண்களுக்கு எதிரான பலாத்காரம் குறித்தும் கௌதம் கம்பீர் ஒரு கட்டுரை ஒன்றை பத்திரிகையில் வெளியிட்டிருந்தார். அதில் “இந்தியாவில் 10 ஆண்டுகளில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் 336 சதவீதம் அதிகரித்துள்ளது. இது போன்ற செயல்களை செய்பவர்கள் தீவிரவாதிகளை விட மிக மோசமானவர்கள்” என்று எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.