ஆஸ்திரேலியவை திரும்ப அழைத்து வாங்க..! இந்தியாவுடன் அடைந்த தோல்விக்கு இங்கிலாந்து முன்னால் வீரர் கிண்டல் பேச்சு..!

vaghan
Advertisement

ஒரு நாள் தரவரிசையில் முதல் இடத்தில இருக்கும் இங்கிலாந்து அணி தற்போது இந்திய அணியுடன் விளையாடி வருகிறது. ஏற்கனவே மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. அதே போல சமீபத்தில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியிலும் படு தோல்வியடைந்துள்ளது.
yadhav
இங்கிலாந்து அணியின் இந்த தொடர் தோல்வி குறித்து பல்வேறு இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களும் தங்களது கடுமையான விமர்சனத்தை வைத்து வருகின்றனர். இங்கிலாந்து பத்திரிகைகளிலும் இங்கிலாந்து அணி சறுக்களை கண்டுள்ளது என்று செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக்கேல் வாகன் ட்விட்டரில் ஒரு கிண்டலான பதிவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் “ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை திரும்ப அழைத்து வர முடியுமா?” என்று குறிப்பிட்டுள்ளார். இவர் அப்படி கூறியதற்கு பின்னணியும் உள்ளது.
micheal
இங்கிலாந்து அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வாஷ் அவுட் செய்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 140 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணியிடம் முதல் முறையாக ஒருநாள் போட்டித் தொடரில் அனைத்துப் போட்டியில் தோல்வி அடைந்தது. அதனை நினைவு கூறும் விதமாக தான் ஆஸ்த்ரேலிய அணியை வம்பிழுத்துள்ளார் மைக்கேல் வாகன்.

Advertisement