- Advertisement -
ஐ.பி.எல்

175 ரன்ஸ்.. போராடிய ஹைதராபாத்தை மடக்கிய ராஜஸ்தான்.. சஹால் படுமோசமான ஐபிஎல் சாதனை

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிபயர் 2 போட்டி மே 24ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் நடைபெற்றது. அதில் குவாலிபயர் 1 போட்டியில் தோல்வியை சந்தித்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எலிமினேட்டரில் பெங்களூருவை தோற்கடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு ஆரம்பத்திலேயே அடித்து நொறுக்க முயற்சித்த அபிஷேக் ஷர்மாவை 12 (5) ரன்களில் ட்ரெண்ட் போல்ட் அவுட்டாக்கினார். அதே போல மற்றொரு துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் தடுமாற்றமாக விளையாடிய நிலையில் அடுத்ததாக வந்த ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி 37 (15) ரன்கள் எடுத்த போது போல்ட் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

வெற்றி யாருக்கு:
அதோடு நிற்காத ட்ரெண்ட் போல்ட் அடுத்ததாக வந்த ஐடன் மார்க்ரமை 1 (2) ரன்களில் அவுட்டாக்கியதால் 57/3 என ஹைதராபாத் ஆரம்பத்திலேயே தடுமாறியது. இருப்பினும் அடுத்ததாக வந்த ஹென்றிச் கிளாசின் அதிரடியாக விளையாட முயற்சித்தார். ஆனால் எதிர்ப்புறம் தொடர்ந்து தடுமாறிய டிராவிஸ் ஹெட் 34 (28) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அடுத்த சில ஓவரிலேயே அடுத்ததாக வந்து திணறிய நித்திஷ் ரெட்டியை 5 (10) ரன்களில் அவுட்டாக்கிய ஆவேஷ் கான் அதற்கடுத்ததாக வந்த அப்துல் சமதை கோல்டன் டக் அவுட்டாக்கினார். ஆனாலும் எதிர்ப்புறம் தொடர்ந்து சவாலை கொடுத்து விளையாடிய ஹென்றிச் க்ளாஸென் 4 சிக்சருடன் அரை சதமடித்து 50 (34) ரன்களில் சந்தீப் சர்மா ஆட்டமிழந்தார். இறுதியில் சபாஸ் அஹ்மத் 18 (18) கேப்டன் பட் கமின்ஸ் 5*, உனட்கட் 5 ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் ஹைதராபாத் 175/9 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 3, சந்தீப் சர்மா 2, ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதைத்தொடர்ந்து 176 ரன்கள் எடுத்தால் ஃபைனலுக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் ராஜஸ்தான் விளையாடி வருகிறது. முன்னதாக இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் முதன்மை ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹால் 4 ஓவரில் 34 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் எதுவும் எடுக்கவில்லை.

இதையும் படிங்க: 175 ரன்ஸ்.. போராடிய ஹைதராபாத்தை மடக்கிய ராஜஸ்தான்.. சஹால் படுமோசமான ஐபிஎல் சாதனை

அதை விட இந்த போட்டியில் மொத்தம் 3 சிக்சர்கள் கொடுத்த அவர் தம்முடைய ஐபிஎல் கேரியரில் மொத்தமாக இதுவரை 224 சிக்ஸர்களை கொடுத்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் பியூஸ் சாவ்லா 222 சிக்ஸர்கள் கொடுத்ததே முந்தைய சாதனையாகும். அந்தப் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா (206), ரவிச்சந்திரன் அஸ்வின் (202) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

- Advertisement -