- Advertisement -
ஐ.பி.எல்

இவரை கழற்றி விட்டா ஆர்சிபி எப்படி ஜெய்க்க முடியும்.. வேறு யாருமே செய்யாத மெகா சாதனை படைத்த சஹால்

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூருவை 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது. அதனால் நாளை சென்னையில் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள ராஜஸ்தான் தகுதி பெற்றது. மே 22ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 173 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக விராட் கோலி 33, ரஜத் படியா 34, மகிபால் லோம்ரர் 32 ரன்களை எடுத்தனர். ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் 3, அஸ்வின் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் 45, ரியான் பராக் 36, ஹெட்மேயர் 26, போவல் 16* ரன்கள் அடித்து 19 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

தனித்துமான சஹால்:
அதனால் சிராஜ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்தும் தோல்வியை சந்தித்த பெங்களூரு தொடர்ந்து 17வது வருடமாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் பரிதாபமாக வெளியேறியது. ராஜஸ்தானின் இந்த வெற்றிக்கு 2 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருது வென்றார். அதே போல மற்றொரு ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹால் 33 ரன்கள் எடுத்து நன்கு செட்டிலாகியிருந்த விராட் கோலியை தக்க சமயத்தில் அவுட்டாக்கி வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

அந்த விக்கெட்டையும் சேர்த்து இதுவரை ராஜஸ்தான் அணிக்காக அவர் 66* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் சஹால் படைத்துள்ளார். இதற்கு முன் சித்தார்த் திரிவேதி ராஜஸ்தான் அணிக்காக 65 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

இது போக 2014 – 2021 வரையிலான காலகட்டங்களில் பெங்களூரு அணிக்காக விளையாடிய சஹால் 139 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதன் வாயிலாக பெங்களூரு அணிக்காக அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் ஏற்கனவே படைத்துள்ளார். தற்போது ராஜஸ்தான் அணிக்காகவும் அதிக விக்கெட்களை எடுத்து சஹால் சாதனை படைத்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 2 வெவ்வேறு அணிகளுக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் சஹால் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: கண்டிப்பா யோசிச்சே ஆகனும்.. 10 ஆவது இடத்தை பிடித்து வெளியேறிய பின்னர் – நீதா அம்பானி வருத்தம்

அவரைத் தவிர்த்து மலிங்கா, பிராவோ, பும்ரா உள்ளிட்ட வேறு யாருமே 2 அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்ததில்லை. ஆனால் இப்படிப்பட்ட இவரை 2022 ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அணி நிர்வாகம் கழற்றி விட்டது. அங்கிருந்து வெளியேறிய சஹால் ராஜஸ்தானுக்காக அதற்குள் 66 விக்கெட்டுகள் எடுத்து ஆர்சிபி அணியை தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -