- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கங்குலி மட்டுமல்ல. நானும் சட்டையை கழற்றி சுத்தினேன். ஆனால் என்னை யாரும் கவனிக்கவில்லை – ரகசியத்தை உடைத்த இந்திய வீரர்

இந்திய அணி கிரிக்கெட் ஆடிய தொடக்கத்திலிருந்து வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற்றது கிடையாது. இதற்கு 2002 ஆம் ஆண்டு கங்குலி தலைமையிலான அணி முற்றுப்புள்ளி வைத்தது.
இங்கிலாந்து சென்று விளையாடிய இந்திய அணி அங்கு ஒருநாள் தொடருக்கான கோப்பையை கைபற்றியது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 325 ரன்கள் குவித்தது. அதன் பிறகு இந்திய அணி களமிறங்கி 146 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

ஆனால் அப்போது இளம் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் முகமது கைஃப் ஆகியோர் பொறுப்பாக ஆடி இந்திய அணியை வெற்றிபெறச் செய்தனர். இதன் காரணமாக வெற்றியின் களிப்பில் இருந்த சௌரவ் கங்குலி தனது டி-ஷர்ட்டை கழற்றி பால்கனியில் இருந்து கொண்டே சுற்றினார். இதன் காரணமாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து தற்போது யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

வெளிநாட்டு தொடர்களில் அப்போது வரை நாங்கள் 10 இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்திருந்தோம். வெளிநாட்டு மண்ணில் சாதித்துக் கிடையாது. நாங்கள் அப்போது புதிய அணி கங்குலி எங்களுக்கு பெரும் ஆதரவு அளித்தார். இங்கிலாந்து அணி 325 ரன்கள் அடித்த உடன் நாங்கள் மிகவும் பின்தங்கி இருந்தாலும் நன்றாக தொடங்கியது.

ஆனால் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்த பின்னர் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக நினைத்தோம். அந்த அளவிற்கு இங்கிலாந்து வீரர்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். அதன் பின்னர் 146 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த போது மைதானத்தில் இருந்த 50 சதவீத ரசிகர்கள் வெளியேறிவிட்டனர்.

- Advertisement -

அடுத்து நானும் முகமது கைப் இறங்கினோம். நாங்கள் ஏற்கனவே இளம் வயதில் ஒன்றாக ஆஅடி இருக்கிறோம். இதன் காரணமாக எங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருந்தது. அதனால் இலக்கினை சரியாக துரத்த திட்டமிட்டோம் அதன்படி எங்களது பேட்டிங்கில் சிறப்பாக அமைந்து அணியும் வெற்றி பெற வைத்தோம்.

அதே நேரத்தில் கங்குலி சட்டையை கழற்றி சுற்றினார். நானும் அதையே செய்தேன். ஆனால் அவருக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது. நான் அதிலிருந்து தப்பி விட்டேன். என்னை யாரும் கவனிக்கவில்லை. என்று கூறியுள்ளார் யுவராஜ் சிங். இதுவரை இந்திய அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் கங்குலியின் அந்த நிகழ்வே சிறந்த வெற்றி கொண்டாட்டமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -
Published by