போட்டியை விட ஈகோ முக்கியமா ! வெற்றி பெற்றும் முன்னாள் வீரர்களிடம் திட்டு வாங்கிய ரிஷப் பண்ட்

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 16-ஆம் தேதி நடைபெற்ற 64-வது லீக் போட்டியில் பஞ்சாப்பை பதம்பார்த்த டெல்லி 17 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பெற்றது. நவி மும்பையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி 20 ஓவர்களில் 159/7 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் அதிரடியாக 63 (48) ரன்களும் சர்ப்ராஸ் கான் 32 (16) ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் சார்பில் பந்துவீச்சில் கலக்கிய லியம் லிவிங்ஸ்டன் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

Mitchell Marsh 63

- Advertisement -

அதை தொடர்ந்து 160 என்ற எட்டிப் பிடிக்க கூடிய இலக்கை துரத்திய பஞ்சாப்க்கு தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ 28 (15) ஷிகர் தவான் 19 (16) ஆகியோர் பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். அந்த நிலைமையில் ராஜபக்சா 4 (5) லியாம் லிவிங்ஸ்டன் 3 (5) கேப்டன் மயங்க் அகர்வால் 0 (2) என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டாமல் டெல்லியின் அபார பந்துவீச்சு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

டெல்லி அபாரம்:
அதனால் 61/5 என சுருண்ட அந்த அணியின் தோல்வி ஆரம்பத்திலேயே உறுதியான நிலையில் கடைசி கட்டத்தில் ஜிதேஷ் சர்மா 44 (34) ராகுல் சஹர் 25* (24) ரன்களை எடுத்து போராடிய போதிலும் 20 ஓவர்களில் 142/9 ரன்களை மட்டுமே எடுத்த பஞ்சாப் பரிதாபமாக தோற்றது. டெல்லி சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்த ஷார்துல் தாக்கூர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இதனால் பங்கேற்ற 13 போட்டிகளில் 7-வது வெற்றியை சுவைத்த டெல்லி புள்ளி பட்டியலில் பெங்களூருவை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்திற்கு முன்னேறியதுடன் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதியாக தக்க வைத்தது.

Kuldeep Yadav

மறுபுறம் பந்துவீச்சில் அசத்தினாலும் வாழ்வா – சாவா என்ற இந்த முக்கியமான போட்டியில் பேட்டிங்கில் கோட்டைவிட்ட பஞ்சாப் பங்கேற்ற 13 போட்டிகளில் 7-வது தோல்வியை பதிவு செய்தது. அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் லிவிங்ஸ்டன், மயங்க் அகர்வால் ஆகியோர் குறைந்தது 10 – 15 ரன்கள் எடுத்திருந்தால் கூட வெற்றி பெற்றிருக்கலாம் என்ற நிலைமையில் தோல்வியடைந்த பஞ்சாப்பின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பும் 99% பறிபோய்விட்டது.

- Advertisement -

திட்டு வாங்கும் பண்ட்:
முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லிக்கு எதிராக பஞ்சாப் கேப்டன் மயங் அகர்வால் வழக்கமாக வேகப்பந்து வீச்சாளருக்கு பதில் அதுவும் ஒரு பகுதிநேர சுழல்பந்து வீச்சாளரான லியம் லிவிங்ஸ்டனை முதல் ஓவரை வீச அழைத்தார். அதற்கு கைமேல் பலனாக முதல் பந்திலேயே டேவிட் வார்னர் கோல்டன் அவுட்டானர். அதனால் ஆரம்பத்தில் சரிந்த டெல்லி நல்லவேளையாக மிட்செல் மார்ஷ் அதிரடியில் தப்பி வெற்றி பெற்றது.

இருப்பினும் 98/3 என்ற நிலைமையில் கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கியபோது மீண்டும் அதே லிவிங்ஸ்டன் 11-வது ஓவரை பந்துவீச வந்தார். அப்போது திறமைக்கு மதிப்பு கொடுக்காமல் பகுதிநேர சுழல் பந்து வீச்சாளரான இவரை சும்மா விடக்கூடாது என்று முடிவெடுத்த ரிஷப் பண்ட் மூர்க்கத்தனமாக காட்டுத்தனமாக சிக்ஸர் அடிக்க முயன்று தமக்கே உரித்தான ஒற்றைக்கையில் 1 சிக்ஸரை பறக்க விட்டாலும் 3-வது பந்திலேயே ஸ்டம்பிங் முறையில் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

இதற்காக ஒரு கேப்டனாக இருந்து கொண்டு போட்டியை பற்றி கவலைப்படாமல் பொறுப்பை காட்டாமல் இப்படி ஈகோவாக விளையாடுவது எந்த வகையிலும் சரியல்ல என்று முன்னாள் வீரர்களிடம் வெற்றிபெற்ற போதிலும் ரிஷப் பண்ட் திட்டு வாங்கியுள்ளார். இதுபற்றி முன்னாள் இந்திய வீரர் ஆர்பி சிங் பேசியது பின்வருமாறு. “போட்டியை விட உங்களுக்கு ஈகோ தான் முக்கியமா? அந்த தருணம் போட்டியை பஞ்சாப் பக்கம் திருப்பியது. இளம் வீரரான லலித் யாதவை குறை கூறக்கூடாது. கேப்டனாக நீங்கள்தான் பொறுப்கேற்க வேண்டும். ஒரு முழுநேர பந்துவீச்சாளராக இல்லாத போதிலும் லிவிங்ஸ்டன் விரித்த வலையில் அவர் (பண்ட்) சிக்கினார்”

Rp Singh 1

“இதுபோன்ற சிறுசிறு போட்டிகளை மகிழ்ச்சியாக எதிர்கொண்டாலும் கேப்டன் என்பவர் பொறுப்பைத் தான் முதலில் ஏற்க வேண்டும். அவரின் இந்தச் செயல் டெல்லிக்கு பின்னடைவை கொடுத்தது. அந்த ஓவரில் ஏற்கனவே நீங்கள் சிக்சர் அடித்த போது அவுட்டான ஷாட் தேவையற்றது. மேலும் 2022 ஐபிஎல் தொடரில் இதுவரை பண்ட் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை” என்று பேசினார்.

அதேபோல் இது பற்றி மற்றொரு முன்னாள் இந்திய வீரர் பிரக்யான் ஓஜா பேசியது பின்வருமாறு. “அவர் இந்தியாவின் வருங்கால கேப்டனாக கூடிய தரமான பேட்ஸ்மேன். ஒரு மேட்ச் வின்னராக கருதப்படும் அவர் 4 பந்துகளில் 4 சிக்சர்களை அடித்தால் மேட்ச் வின்னராக முடியாது. மேட்ச் வின்னர் என்பவர் பொறுப்பேற்று விளையாட வேண்டும். ரிஷப் பண்டு ஒருசில சிக்ஸர்கள் அடித்தாலும் கவலையில்லை என்ற நோக்கத்திலேயே பஞ்சாப் லிவிங்ஸ்டனை தைரியமாக கொண்டு வந்து வெற்றிகரமாக அவர் அவுட் செய்தது” என்று பேசினார்

Advertisement