உமேஷ் யாதவ்வை கேட்ட வார்த்தையில் திட்டிய ஐயர்லாந்து வீரர்..! STUMP MIC இல் பதிவானது..! – வீடியோ உள்ளே

இந்திய கிரிக்கெட் அணி இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஐயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தது. இந்த இரண்டு போட்டிகளிலும் ஐயர்லாந்து அணி இந்தியாவிடம் படு தோல்வியடைந்தது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் ஐயர்லாந்து அணியின் வில்லியம் போர்ட்டர்பீல்ட் ஆட்டமிழந்த போது கொச்சை வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.
umesh
இந்தியா மற்றும் ஐயர்லாந்து அணிகள் மோதிய இந்த தொடரின் இரண்டவது போட்டி நேற்று (ஜூன் 29) டப்லின் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ராகுல் 70 ரன்னும், ரெய்னா 69 ரன்னும் குவித்தனர்.

பின்னர் 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஐயர்லாந்த் அணி 12.3 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்களுக்கு சுருண்டது. ஐயர்லாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, அந்த அணியில் 3 வது பேட்டிங் வரிசையில் வில்லியம் போர்ட்டர்பீல்ட் களமிறங்கினார்.

வில்லியம் போர்ட்டர்பீல்ட் 10 பந்துகளில் 14 ரன்களை எடுத்திருந்த நிலையில் , போட்டியின் 3 வது ஓவரை இந்திய அணியின் உமேஷ் யாதவ் வீசினார். அப்போது அந்த ஓவரின் 4 வது பந்தை அடிக்க முயன்ற வில்லியம் போர்ட்டர்பீல்ட் போல்ட் ஆகினார். இதனால் ஆத்திரத்தில் “f “கேட்ட வார்த்தை ஒன்றை பயன்படுத்தினார். அவர் கூறியது ஸ்டம்பில் இருந்த மைக்கில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதோ அந்த வீடியோ பதிவு.