உலகக்கோப்பை போட்டியில் தோனி அடிக்கடி பேட்டை மாற்றுவது ஏன் – தோனி மேனேஜரின் விளக்கம்

Dhoni Bat issue

உலகக்கப்போய் தொடரை தொடந்து பார்த்து வரும் ரசிகர்கள் ஒரு விடயத்தை நிச்சயம் கவனித்திருப்பார்கள். அது என்னவென்றால் தோனி அடிக்கடி தனது பேட் ஸ்டிக்கரை மாற்றிக் கொண்டே இருப்பது தான். இந்த உலகக்கப்போய் தொடரில் மட்டும் அவர் கிட்டதட்ட மூன்று முறை தனது பேட் ஸ்டிக்கரை மாற்றி வெவ்வேறு நிறுவனங்களின் லோகோக்கள் பதியப்பட்ட பேட்டை கொண்டு விளையாடி உள்ளார்.

dhoni 2

சில தினங்களுக்கு முன்பு நடந்த இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் கூட SG லோகோ ஸ்டிக்கர் கொண்ட பேட்டுடன் விளையாடிய தோனி, அதே போட்டியில் BAS லோகோ ஸ்டிக்கர் கொண்ட பேட்களையும் பயன்படுத்தினார். இதனை உற்று கவனித்த சிலர், தோனி பல நிறுவனங்களோடு ஒப்பந்தத்தில் உள்ளார். அதனால் தான் அவர் ஒரே போட்டியில் பல ஸ்டிக்கர்கள் கொண்ட பேட்டை பயன்படுத்துகிறார் என்று விமர்சித்தனர். ஆனால் தோனியை பற்றி நன்கு அறிந்த ரசிகர்கள் பலர், அவன் யாரோடு ஒப்பந்தத்தில் இல்லை என்று கூறி வந்தனர்.

இந்த நிலையில், இது குறித்து பதிலளித்துள்ள தோனியின் மேனேஜர் அருண் பாண்டே, தோனி இந்த உலகக்கோப்பை தொடரில் பல்வேறு ஸ்டிக்கர்கள் கொண்ட பேட்டை பயன்படுத்துவது உண்மை தான். ஆனால் அதற்காக அவர் பல நிறுவங்களோடு ஒப்பத்தில் இருக்கிறார் என்பது ஒரு வதந்தி தான். தோனியின் ஆரம்பகட்ட கிரிக்கெட் வாழ்க்கையில் உதவிய சில நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலே அவர் பல நிறுவங்களின் லோகோ கொண்ட பேட்களை பயன்படுத்துகிறார். அதற்காக அவர் எந்த ஊதியமும் பெறவில்லை.

Dhoni 1

தோனிக்கு மிகப்பெரிய மனம் உள்ளது. அவருக்கு பணம் முக்கியமல்ல, அது அவரிடம் தேவைப்படும் அளவுக்கு உள்ளது. தனக்கு உதவி செய்தவர்களை மறக்காமல் அவர்களுக்கு உதவும் நல்லெண்ணம் கொண்டவர் தோனி. அதன் அடிப்படையில் தான் அவர் பேட்டின் லோகோக்களை அவ்வப்போது மாற்றி வருகிறார். தோனியின் ஆரம்பக் கட்ட களத்தில் இருந்து BAS நிறுவனம் அவருடன் பயணித்து வந்தது. SG-யும் அவருக்கு உதவிகரமாக இருந்தது என்றார் தோனியின் மேனேஜர்.

- Advertisement -

Dhoni

பொதுவாக, கிரிக்கெட் வீரர்கள் தங்களது பேட்களில் ஸ்பான்சர்ஸ் பெயரை பயன்படுத்த 4-5 கோடி வரை ஊதியமாக பெறுவது வழக்கம். ஆனால் தல தோனிக்கு தற்போது யாரும் ஸ்பான்சர் கிடையாது என்பது தான் உண்மை. அது மட்டும் அல்லாமல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த SPARTAN நிறுவனத்துடன் அவர் செய்து கொண்ட ஒப்பந்தம் சில சட்ட சிக்கலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.