ஃபைனலையும் அச்சுறுத்தும் மழை.. ரத்தானால் கோப்பை யாருக்கு? ஐசிசி விதிமுறை – பார்படாஸ் வெதர் ரிப்போர்ட்

IND vs RSA Rain
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இருக்கும் பார்படாஸ் நகரில் உள்ள கென்சிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றி கண்ட தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன. அப்போட்டியில் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அதில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்கா வரலாற்றிலேயே முதல் முறையாக உலகக் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. எனவே இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி தங்களுடைய முதல் உலகக்கோப்பையை முத்தமிட தென்னாப்பிரிக்கா தயாராகியுள்ளது. மறுபுறம் ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து போன்ற அணிகளை வீட்டுக்கு அனுப்பி வைத்த இந்தியா நல்ல ஃபார்மில் இருக்கிறது.

- Advertisement -

மழை வந்தால்:
எனவே கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தி இம்முறை கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு செல்லும் லட்சியத்துடன் ரோஹித் சர்மா தலைமையிலான அணி களமிறங்குகிறது. ஆனால் இந்த 2 அணிகளுக்கு நிகராக மழையும் ஃபைனலில் விளையாடத் தயாராகியுள்ளது. ஆம் இப்போட்டி நடைபெற உள்ள பார்படாஸ் நகரில் ஜூன் 29ஆம் தேதி சராசரியாக 70% இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது.

குறிப்பாக உள்ளூர் நேரப்படி போட்டி நடைபெறும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை சராசரியாக 60 – 70% மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. இதனால் செமி ஃபைனல் போலவே இந்தப் போட்டியிலும் மழை குறிக்கீடும் என்று உறுதியாக தெரிகிறது. இருப்பினும் இந்தப் போட்டிக்கு ஐசிசி ஏற்கனவே ரிசர்வ் நாள் அறிவித்துள்ளது.

- Advertisement -

எனவே முடிந்தளவுக்கு ஜூன் 29ஆம் தேதியே நடுவர்கள் குறைந்தபட்சம் தலா 10 ஒவர்கள் கொண்ட போட்டியை நடத்த முயற்சிப்பார்கள். ஒருவேளை அதையும் தாண்டி மழை பெய்தால் மட்டுமே ரிசர்வ் நாளான ஜூன் 30ஆம் தேதி மீண்டும் ஃபைனல் நடைபெறும். அன்றைய நாளிலும் குறைந்தபட்சம் தலா 10 ஒவர்கள் கொண்ட போட்டியை நடத்தி முடிவைக் கொண்டு வர நடுவர்கள் முயற்சிப்பார்கள்.

இதையும் படிங்க: உலகத்துக்கே சொல்லிக்கொடுத்த எங்களுக்கு நீங்க சொல்லாதீங்க.. கண்ணால் பாருங்கன்னு சொன்னேன்.. ரோஹித்துக்கு இன்சமாம் பதிலடி

அதையும் தாண்டி மழை பெய்தால் வேறு வழியின்றி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க ஆகிய 2 அணிகளும் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு கோப்பையும் சாம்பியன் பட்டமும் பகிர்ந்து கொடுக்கப்படும். எடுத்துகாட்டாக 2002 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல் மழையால் ரிசர்வ் நாள் வரை சென்று ரத்து செய்யப்பட்டது. அதனால் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டது போன்ற நிகழ்வு இம்முறை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement