யாரா இவன் இப்படி அடிக்கிறான்..! தோனியை பார்த்து பாக்கிஸ்தான் பயந்த நாள் இன்று..! – காரணம் இதுதான்..?

dhoni3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த தோனி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் என்பது நமக்கு தெரியும். இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் 28 ஆண்டு கால உலக கோப்பை கனவை நினைவாக்கியவர் தோனி. இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பற்ற பொக்கிஷமாக இருக்கும் தோனியின் ஒரு சிறு ரீ-கேப் தான் இந்த தொகுப்பு.
dhoni1
2004 ஆம் ஆண்டு தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய தோனி , தனது முதல் ஒரு நாள் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். பின்னர் தோனி என்ற ஒருவர் இருக்கிறார், அவர் காட்டுத்தனமாக விளையாடுகிறார் என்று வெளியுலகிற்கு தெரிய வந்ததே 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் தான்.

கடந்த 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியுடன் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடியது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் தான் தோனி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதற்கு முன்னாள் 5 போட்டிகளில் விளையாடிய தோனி அதிக பட்சமாக குவித்த ரன் 12 மட்டும் தான்.

இந்த போட்டிக்கு முன்னாள் இந்திய பேட்டிங் வரிசையில்7 வது இடத்தில் களமிறக்கபட்ட தோனி. பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2 வது ஒரு நாள் போட்டியில் 3 வது ஆர்டரில் களமிறங்கினார். அந்த போட்டியில் தனது அதிரடியை காட்டிய தோனி பாகிஸ்தான் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களான அப்ரிடி, சோயிப் மாலிக், சமி போன்றவர்களின் பந்துகளை மைதானத்தில் பறக்க விட்டார். நம்ம ஊர் பாஷையில் சொல்ல போனால் தோனியை அந்த போட்டியில் “காட்டான் ” என்று தான் பாகிஸ்தான் வீரர்கள் நினைத்திருப்பார்கள்.
dhoni
அந்த போட்டியில் இந்திய அணியில் அதிகபட்ச ரன்னை குவித்த தோனி. 148 ரன்களை குவித்து அந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். அந்த போட்டிக்கு பின்னர் பேட்டிங் ஆர்டரில் தோனிக்கு ப்ரோமோஷன் கொடுக்கப்பட்டு 3 வது வரிசையில் தொடர்ந்து ஆடினார். அதற்கு அடுத்து 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் 183 ரன்களை குவித்து அசத்தினார். தற்போது தோனி கிரிக்கெட் உலகிற்கு வந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் இந்த ஜாம்பவான் கிரிக்கெட் உலகில் ஒரு சிறந்த வீரராக திகழ்ந்து கொண்டு தான் வருகிறார்.

Advertisement