- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வீடியோ : நியூஸிலாந்து பஸ் ட்ரைவருக்கு பாண்டியா தலைமையிலான இந்திய அணி கொடுத்த பரிசு – பின்னணியை கேட்டு நெகிழும் ரசிகர்கள்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு பயணித்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. டி20 உலக கோப்பையில் சுமாராக செயல்பட்டு தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்களுக்கு பதில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளித்து 2024 உலக கோப்பைக்கு முன்பாக இளம் அணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஏற்ப ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா மழைக்கு மத்தியில் சிறப்பாக செயல்பட்டு 1 – 0 (3) என்ற கணக்கில் டி20 தொடரை வென்று தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 அணி என்பதை நிரூபித்தது.

அதைத்தொடர்ந்து 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இளம் அணி முதல் போட்டியில் 306 ரன்களை குவித்தும் தோல்வியை சந்தித்து 1 – 0* என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. முன்னதாக நடைபெற்ற முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டி நடைபெற்ற நேப்பியர் நகருக்கு நியூசிலாந்து வாரியம் சார்பில் பாதுகாப்பான பேருந்தில் இந்தியா அணியினர் அழைத்து செல்லப்பட்டனர். அந்த பேருந்து ஓட்டுனர் தீவிரமான கிரிக்கெட் ரசிகர்கள் என்பதால் நியூசிலாந்து அணியை போலவே இந்திய அணியையும் ரசிப்பவராக உள்ளார்.

- Advertisement -

நெஞ்சை தொடும் பரிசு:

அந்த நிலையில் நேப்பியர் நகரில் அபூர்வமாக மழை வந்து போட்டியை சமன் செய்ததால் 2வது போட்டியில் வென்ற இந்தியா நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியது. அந்த கோப்பையை வென்ற மகிழ்ச்சியுடன் ஹோட்டலுக்கு மீண்டும் இந்திய வீரர்களை அழைத்துச் சென்ற பேருந்து ஓட்டுனர் சிறிய தொண்டு நிறுவனத்தை நடத்துபவராகவும் இருக்கும் நிலையில் இதை விட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது என்று கருதி கேப்டன் பாண்டியாவிடம் உங்களது கையொப்பமிட்ட ஜெர்சியை பரிசாக கொடுப்பீர்களா என்று கேட்டுள்ளார்.

அதை விட நீங்கள் கொடுக்கும் அந்த ஜெர்ஸியை விரைவில் நடைபெறும் ஒரு ஏலத்தில் ஏலம் விட்டு அந்த தொகை தம்முடைய தொண்டு நிறுவனத்திற்கு பயனடுத்துவதற்காக கேட்பதாக ஸ்பெஷல் கோரிக்கையையும் அந்த ஓட்டுனர் வைத்தார். அதை கேட்டு நெகிழ்ச்சியடைந்த பாண்டியா உடனடியாக சற்றும் யோசிக்காமல் தன்னுடைய ஜெர்சியை கழற்றி அதில் தன்னுடைய கையொப்பமிட்டது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய வீரர்களின் ஆட்டோகிராப் வாங்கி அந்த ஓட்டுனருக்கு பரிசாக கொடுத்துள்ளார். அதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த அந்த ஓட்டுநர் இந்திய வீரர்களுக்கு சல்யூட் தெரிவித்து அவர்களிடமிருந்து விடைபெற்றதாக தெரிகிறது.

- Advertisement -

இதை அறிந்த பிரபல இந்திய பத்திரிகையாளர் விமல் குமார் அந்த ஓட்டுநரை தேடி கண்டுபிடித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து அதைப்பற்றிய விவரத்தை பேட்டி எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அந்த ஓட்டுநர் மகிழ்ச்சியுடன் பேசியது பின்வருமாறு. “எனக்கு இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட அனைத்து இந்திய வீரர்களும் கையொப்பமிட்ட ஜெர்சியை பரிசாக கொடுத்தார்கள். அந்த ஜெர்சியை வரும் மார்ச் மாதம் நியூசிலாந்தில் நடைபெறும் ஒரு ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்ட பயன்படுத்த உள்ளேன். அதற்கு இப்போதே மாபெரும் உதவி செய்துள்ள இந்திய அணிக்கு என்னுடைய சல்யூட்” என்று கூறினார்.

இதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் ஓட்டுனர் கோரிக்கையை ஏற்று தொண்டு நிறுவனத்திற்கு உதவும் வகையில் நடந்து கொண்ட ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவிக்கிறார்கள். முன்னதாக டி20 உலக கோப்பையில் சந்தித்த தோல்வியை தொடர்ந்து தேர்வுக்குழுவை அடியோடு நீக்கியுள்ள பிசிசிஐ வெவ்வேறு வகையான கிரிக்கெட்டுக்கு வெவ்வேறு கேப்டன்களை நியமிக்க பரிசீலனை செய்து வருகிறது. அந்த வரிசையில் டி20 கிரிக்கெட்டில் துடிதுடிப்பான ஹர்திக் பாண்டியா விரைவில் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by