எங்களின் நன்மைக்காக நீங்க இதை கண்டிப்பா செய்வீங்கன்னு நம்புறேன்.. இந்தியாவுக்கு வாசிம் அக்ரம் கோரிக்கை

Wasim Akram
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. 1992 உலக சாம்பியனான பாகிஸ்தான் சமீப காலங்களாகவே தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேவிடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானிடம் அவமான தோல்வியை பதிவு செய்தது.

அந்த வரிசையில் இந்த உலகக் கோப்பையில் கத்துக் குட்டியாக கருதப்படும் அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது. இதற்கிடையே 2021 டி20 உலகக் கோப்பை தவிர்த்து சமீப காலங்களில் இந்தியாவிடம் அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. அதனால் அந்த அணி தற்சமயத்தில் பாகிஸ்தான் அதள பாதாளத்தில் தவிக்கிறது என்றே சொல்லலாம்.

- Advertisement -

வாசிம் அக்ரம் கோரிக்கை:
இந்த சூழ்நிலையில் 2025 பிப்ரவரி மாதம் வாக்கில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. தற்போது வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான் அத்தொடரில் சொந்த மண்ணிலாவது சிறப்பாக விளையாடி கோப்பை வென்று மறுமலர்ச்சி பெறுவதற்காக காத்திருக்கிறது. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் அந்த தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடுமா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது.

ஏனெனில் 2023 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களுடைய போட்டிகளை இலங்கை மண்ணில் விளையாடியது. இந்நிலையில் முன்பை விட தற்போது பாகிஸ்தானில் அடிப்படை வசதிகளும் பாதுகாப்புகளும் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். எனவே பாகிஸ்தான் கிரிக்கெட்டின் நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் இந்தியா 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் தங்களுடைய நாட்டுக்கு வந்து விளையாட வேண்டும் என்று அவர் அன்பான கோரிக்கை வைத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு வரும் என்று நம்புகிறேன். எங்கள் மொத்த நாடும் அனைத்து அணிகளையும் வரவேற்க காத்திருக்கிறது. சிறப்பான வசதிகளை கொண்டுள்ள நாங்கள் புதிய மைதானங்களில் வேலை செய்து வருகிறோம். லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் போன்ற மைதானங்களில் பாகிஸ்தான் வாரியத் தலைவர் வசதிகளை மேம்படுத்தி வருகிறார்”

இதையும் படிங்க: அந்த 2 பேரும் நெருப்பு மாதிரி.. கோலியிடம் அந்த பிரச்சனையில்ல.. ஃபைனலில் இதை செய்வோம்.. ரோஹித் பேட்டி

“கிரிக்கெட்டில் சிறந்து விளங்க பாகிஸ்தானுக்கு அந்தத் தொடர் தேவை. எனவே அனைத்து நாடுகளும் வரும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் கிரிக்கெட்டும் விளையாட்டும் எப்போதும் தனியாக இருக்க வேண்டும்” என்று கூறினார். முன்னதாக கடைசியாக 2006ஆம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் இந்தியா விளையாடியது. அதன் பின் எல்லை பிரச்சினை காரணமாக 2012க்குப்பின் அந்நாட்டுடன் இருதரப்பு தொடரில் மோதுவதை கூட இந்தியா தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement