- Advertisement -
உலக கிரிக்கெட்

ஏற்கனவே பெய்த மழையில் இது வேறயா.. ஃபிளைட் நம்பர் ஈகே 601 போங்க.. பாகிஸ்தானை சாடிய வாசிம் அக்ரம்

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் பாகிஸ்தான் லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. இந்த வருடம் முதல் போட்டியிலேயே கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்காவிடம் சொதப்பிய பாகிஸ்தான் சூப்பர் ஓவரில் அவமான தோல்வியை சந்தித்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக வெறும் 120 ரன்களை அடிக்க முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் பரிதாப தோல்வியை பதிவு செய்தது.

இருப்பினும் கனடாவுக்கு எதிராக வென்ற பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல அமெரிக்கா அதனுடைய கடைசிப் போட்டியில் தோற்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. அந்த நிலையில் ஜூன் 14ஆம் தேதி ப்ளோரிடாவில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. ஆனால் மழை காரணமாக அந்த போட்டி டாஸ் கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

- Advertisement -

பாகிஸ்தானின் பரிதாபம்:
அதனால் 1 புள்ளியை எக்ஸ்ட்ராவாக பெற்ற அமெரிக்கா மொத்தம் 5 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதன் காரணமாக தங்களுடைய கடைசி போட்டியில் விளையாடுவதற்கு முன்பாகவே பாகிஸ்தான் பரிதாபமாக வெளியேறியது. முன்னதாக அந்தப் போட்டியில் மைதானம் காய்ந்து விட்டதா என்பதை பார்ப்பதற்காக நடுவர்கள் பிட்ச்சை சோதித்துக் கொண்டிருந்தனர். அப்போது பின்புறத்தில் ஒரு உள்ளூர் மைதான பராமரிப்பாளர் பிட்ச் அருகில் தன்னுடைய கைகளை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்தார்

அதை பார்த்த பாகிஸ்தான் ரசிகர்கள் ஏற்கனவே மழை பெய்திருக்கும் நிலையில் எங்களை வெளியேற்றுவதற்காக வேண்டுமென்றே அமெரிக்காவை சேர்ந்த உள்ளூர் மைதான பராமரிப்பாளர் இப்படி செய்கிறார் என்று சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி ஈகே 601 விமானத்தைப் பிடித்து நாட்டுக்குச் செல்லலாம் என முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

மேலும் அமெரிக்க அணிக்கு வாழ்த்து தெரிவித்த அவர் இது பற்றி ஐசிசி வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளது பின்வருமாறு. “அமெரிக்க அணிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் கிரிக்கெட்டை உலகமயமாக்குவது பற்றி பேசுகிறீர்கள். அதை அவர்கள் சரியாக செய்துள்ளார்கள். சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அமெரிக்கா அதற்கு தகுதியானது. லீக் சுற்றில் அவர்கள் பாகிஸ்தான் அணியை வீழ்த்தினர்”

இதையும் படிங்க: பலமுறை சொல்லியும் கேட்கல.. அதுவே போதும்ன்னு சொல்லிட்டாரு.. இந்தியாவின் அஜய் ஜடேஜாவுக்கு ஆப்கானிஸ்தான் பாராட்டு

“அதனாலேயே அவர்கள் இங்கே இருக்கின்றனர். பாகிஸ்தான் அணி ஈகே 601 விமானத்தில் இருக்க வேண்டும். அங்கிருந்து துபாய்க்கு சென்று பின்னர் அவர்கள் தங்களுடைய சொந்த நகரங்களுக்கு செல்ல வேண்டும். அதன் பின் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்” எனக் கூறினார். மொத்தத்தில் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 3வது முறையாக லீக் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -