- Advertisement -
ஐ.பி.எல்

விராட் கோலிக்கு நீங்க அட்வைஸ் பண்ணாதீங்க.. அவர் என்ன செய்வாரு.. தப்பு ஆர்சிபி மேல.. வாசிம் அக்ரம் பதிலடி

ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணி பிளே ஆஃப் சுற்றுடன் வெளியேறியது. இந்த வருடம் முதல் 7 போட்டிகளில் 6 தோல்விகளை பதிவு செய்த அந்த அணி கடைசி 6 போட்டியில் 6 வெற்றிகளை பெற்று கம்பேக் கொடுத்தது. குறிப்பாக கடைசி போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னையை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பிய பெங்களூரு 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

அதனால் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு எலிமினேட்டரில் ராஜஸ்தானிடம் தோல்வியை சந்தித்து வெளியேறியது. அதனால் தொடர்ந்து 17வது வருடமாக ஐபிஎல் கோப்பையை முத்தமிட முடியாமல் விராட் கோலியும் ஏமாற்றத்தை சந்தித்தார். இத்தனைக்கும் 741 ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை வென்ற அவர் முழுமூச்சுடன் போராடியும் மற்ற வீரர்கள் சொதப்பியதால் கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டார்.

- Advertisement -

பீட்டர்சனுக்கு பதிலடி:
அப்போது ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு விராட் கோலி ஆர்சிபி அணியை விட்டு வெளியேறி டெல்லி போன்ற மற்ற அணிக்கு விளையாட வேண்டும் என்று கெவின் பீட்டர்சன் வெளிப்படையான ஆலோசனை வழங்கினார். இந்நிலையில் விராட் கோலிக்கு நம்மை போன்ற முன்னாள் வீரர்கள் யாரும் வழங்க வேண்டியதில்லை என்று அவருக்கு வாசிம் அக்ரம் பதிலடி கொடுத்துள்ளார்.

அத்துடன் சஹால் போன்ற வீரரை கழற்றி விட்டு ஏலத்தில் சொதப்பும் ஆர்சிபி நிர்வாகம் தவறு செய்தால் விராட் கோலி என்ன செய்ய முடியும்? என்றும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “கெவின் நீங்கள் என்னுடைய நல்ல நண்பர். இது போன்ற வர்ணனை செய்யும் முன்னாள் வீரர்கள் இந்தியா சம்பந்தமாக ட்விட்டரில் பதிவிடுகின்றனர். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை”

- Advertisement -

“இருப்பினும் அது விராட் கோலிக்கு பெரிய விஷயம் கிடையாது. பெங்களூரு அணிக்காக வெல்ல விரும்பும் அவர் அணியை மாற்றினால் மட்டும் என்ன நடக்கும்? ஆர்சிபி அணிக்காக கோப்பை வெல்ல வேண்டும் என்பது அவருடைய முடிவு. இது தான் என்னுடைய கருத்து. அனைத்தைப் பற்றியும் பேசக்கூடாது என்பதை நான் கற்றுக் கொண்டது. பெங்களூருவின் வெற்றி என்பது ஏலத்தில் வாங்கும் வீரர்களை பொறுத்தது. இந்த வருடம் அவர்களின் பவுலிங் தரமாக இல்லை”

இதையும் படிங்க: டி20 உலககோப்பை இந்திய அணியின் வீரர்கள் ஒருவர் கூட ஐ.பி.எல் பைனலில் இல்லை – ஆனா நம்ம பசங்க கலக்கிட்டாங்க

“குறிப்பாக அதிக ரன்கள் அடிக்கப்படக்கூடிய சொந்த மைதானத்தில் அவர்களின் பேட்டிங் நன்றாக இருக்கிறது. ஆனால் பவுலிங் சுமாராக உள்ளது. சஹாலை விடுவித்த முடிவை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பயிற்சியாளர் மைக் ஹெசன் அதற்கான பணம் போதவில்லை என்று சொன்னார். ஆனால் அது தான் மிடில் ஓவர்களில் அவர்களுக்கு பிரச்சனையை கொடுக்கிறது. எனவே அடுத்த வருடம் இதற்கெல்லாம் அவர்கள் தயாராக வருவார்கள் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

- Advertisement -