- Advertisement -
உலக கிரிக்கெட்

AUS vs BAN : இவரின் சாதனையை சமன் செய்தது மகிழ்ச்சி – வார்னர் பேட்டி

உலககோப்பைத் தொடரின் 26வது போட்டி நேற்று நாட்டிங்ஹாம் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், மோர்தசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 381 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வார்னர் 166 ரன்கள் அடித்தார். கவாஜா 89 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பின்னர் 382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 333 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ரஹீம் 102 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் வார்னர் கூறியதாவது : இந்த போட்டியில் அடித்த சதத்தின் மூலம் ஜாம்பவனான கில்கிரிஸ்ட்-ன் 16 சதங்களை நிறைவு செய்ததை பெருமையாக நினைக்கிறேன். மேலும் இதுபோன்ற போட்டியில் புதிய பந்துகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும். ஏனெனில் பிட்ச் மெதுவாக இருந்தது அதனால் முதலில் நிதானமாக ஆடினோம். பந்துவீச்சாளர்களுக்கு இந்த இதுபோன்ற மைதானங்களில் பந்து வீசுவது கடினம். இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்திருப்பது அதைவிட முக்கியமான விடயம் என்று வார்னர் கூறினார்.

- Advertisement -
Published by