வார்னருக்கு நேரமே சரியில்ல போல. 2016க்கு பிறகு நேற்று நடந்த சம்பவம் – விவரம் இதோ

Warner
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 33-வது போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும் மோதின. ஏற்கனவே புள்ளி பட்டியலில் படுவீழ்ச்சியில் இருக்கும் சன்ரைசர்ஸ் அணி மீண்டும் ஒருமுறை டெல்லி அணியிடம் தோல்வி அடைந்து இன்னும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. அதேவேளையில் நேற்றைய போட்டியில் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பெற்று மீண்டும் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றுள்ளது.

dcvssrh

- Advertisement -

நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி டெல்லி அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே குவித்தனர். டெல்லி அணி சார்பாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் நோர்க்கியா 2 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்கள்.

சன்ரைசர்ஸ் அணி சார்பாக பேட்டிங்கில் அப்துல் சமாத் மட்டுமே 28 ரன்கள் குவித்தார். அதுதவிர சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான் 22 ரன்களை குவித்தார். இவர்கள் இருவரை தவிர மற்ற ஒருவர் கூட 20 ரன்கள் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 135 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் பண்ட் ஆகியோர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து சிறப்பான வெற்றியை டெல்லி அணிக்கு பெற்றுக் கொடுத்தனர்.

warner 1

இந்நிலையில் இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி சார்பாக விளையாடிய டேவிட் வார்னர் ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஏற்கனவே இந்த தொடரின் ஆரம்பத்தில் சன் ரைசர்ஸ் அணி தொடர்ச்சியாக தோல்வி அடையவே தனது கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்தார். அதுமட்டுமின்றி அணியிலிருந்தும் ஒரு சில போட்டிகள் வெளியில் அமர வைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் துவங்கியுள்ள இந்த இரண்டாவது பாதியில் அவருக்கு கிடைத்த வாய்ப்பை மீண்டும் ஒரு முறை தவற விட்டுள்ளார்.

Warner

நேற்றைய போட்டியில் விளையாடிய வார்னர் மூன்று பந்துகளை சந்தித்த நிலையில் முதல் ஓவரிலேயே ரன்கள் எதுவும் அடிக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதற்கு முன்னர் 2016ஆம் ஆண்டு வார்னர் டக் அவுட் ஆகியிருந்தார். அதனைத்தொடர்ந்து நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் டக் அவுட்டாகி ஒரு மோசமான நிலையை சந்தித்துள்ளார். வழக்கமாகவே அதிரடியில் அசத்தும் இவருக்கு இப்படி ஒரு நிலையா ? என்று ரசிகர்கள் தங்களது வருதத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement